Share on Social Media


அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது ஆவினில் வேலைவாங்கித் தருவதாக கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்தப் புகாரில் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்டோர் மீது விருதுநகர் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில் முன்ஜாமீன்கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதால், வெள்ளிக்கிழமை விருதுநகரில் நடைபெற்ற அதிமுக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர் திடீரென தலைமறைவானார்.

ALSO READ | ’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்

முதற்கட்டமாக ராஜேந்திரபாலாஜியின் சகோதரி மகன்கள் மற்றும் கார் ஓட்டுநரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர், விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் உத்தரவின்பேரில் 2 துணை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ராஜேந்திர பாலாஜியை தேடி வருகின்றனர். சென்னை, பெங்களுரூ, வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள் என அவருக்கு நெருக்கமானவர்களை கண்டுபிடித்து அவர்களிடமும் விசாரணையை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது.

ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது

பெங்களூரில் தலைமறைவாக இருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததையடுத்து, அங்கும் தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர். பழைய சிம் கார்டு மற்றும் செல்போனை டிராக் செய்துவிடுவார்கள் என்பதால், புதிய சிம்கார்டு ஒன்றை அவர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், விரைவில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *