Share on Social Media


தெலுங்கு சூப்பர் ஸ்டார் பிரபாஸ், பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் காதலை மையமாக வைத்து உருவாகும் படமான ராதே ஷ்யாம் படம் 2020ம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என அப்படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி (Bahubali) படம் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆனவர் நடிகர் பிரபாஸ் (Prabhas). அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நிறைய பெரிய படங்களில் கமிட் ஆனர் பிரபாஸ். 2019ம் ஆண்டு வெளியான சாகோ படம் பான் இந்தியா படமாக வெளியானது. அதனை தொடர்ந்து அவர் நடிக்கும் அடுத்த படமான ராதே ஷ்யாமும் (Radhe Shyam) பான் இந்திய படமாக வெளியாக இருக்கிறது.

ALSO READ | பிரபாஸின் ”ராதே ஷியாம்” First Look

1970-களில் ஐரோப்பில் நடக்கும் காதல் கதையாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. மிகுந்த பொருட்செலவில் உருவாகும் இப்படத்தினை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த வருடம் ஜூலை 30 ஆம் தேதி வெளியாக வேண்டிய இப்படம் கொரோன காரணமாக வெளியாகவில்லை. தற்போது கொரோனா தாக்கம் மெல்ல குறைந்து வரும் நிலையில் அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அப்படக்குழு அறிவித்துள்ளது.

 

 

 

 

 

 

மேலும் இப்படத்தின் ரிலீஸ் குறித்து பூஜா ஹெக்டே தனது டிவிட்டர் பக்கத்தில், ராதே ஷ்யாம் எனக்கு மிகவும் பிடித்த சங்கராந்தி தினத்தில் வெளியாவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் உங்களை நிச்சயம் ஏமாற்றாது என்று கூறியிருந்தார்.

ALSO READ | ‘ஆதிபுருஷ்’ படம் பற்றிய அட்டகாசமான அப்டேட்டை வெளியிட்டார் நடிகர் Prabhas!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *