Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • பைக் ஓட்டிய ராய் லட்சுமி
  • ராய் லட்சுமியின் பைக் வீடியோ வைரல்
  • ராய் லட்சுமியை பாராட்டும் ரசிகர்கள்


விக்ராந்தின் கற்க கசடற படம் மூலம் நடிகையானர் ராய் லட்சுமி. 15 வயதில் நடிக்க வந்த அவர் இதுவரை சுமார் 50 படங்களில் நடித்துள்ளார்.

அவர் தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். அஜித்தின் மங்காத்தா படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வியக்க வைத்தார்.

அதர்வாவின் இரும்பு குதிரை, சுந்தர் சி.யின் அரண்மனை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். ஜூலி 2 இந்தி படத்திற்காக அவர் கூடுதல் கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை.

தற்போது அவர் கையில் 2 தமிழ் படங்கள், ஒரு தெலுங்கு படம் இருக்கிறது. உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சியாகிவிட்ட ராய் லட்சுமி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் படு ஆக்டிவாக இருப்பவர்.

அவ்வப்போது தன் கவர்ச்சி புகைப்படங்கள், பிகினி புகைப்படங்களை வெளியிடுவார். பிற நடிகைகள் பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் கிண்டல் செய்யும் சமூக வலைதளவாசிகள் ராய் லட்சுமியை மட்டும் பாராட்டுவார்கள்.

இந்நிலையில் சற்று வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்தாரோ என்னவோ, தான் பைக் ஓட்டும் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். கருப்பு உடையில் ராய் லட்சுமி பைக் ஓட்டிய வீடியோ வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

உங்களுக்கு பைக் ஓட்டக் கூடத் தெரியுமா?. கலக்குறீங்க ராய் லட்சுமி. கவர்ச்சி மட்டும் அல்ல எனக்கு பிற திறமைகளும் இருக்கிறது என்று நிரூபித்துவிட்டீர்கள். அருமை என தெரிவித்துள்ளனர்.

பைக் வீடியோவை பார்த்த சிலர் பழைய கதையை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது கிரிக்கெட் வீரர் தோனியும், ராய் லட்சுமியும் ஒரு காலத்தில் காதலித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. தோனிக்கு பைக் ஓட்டுவது என்றால் உயிர். அதனால் தோனியை போன்றே அவரின் முன்னாள் காதலியும் பைக் மீது பிரியம் வைத்திருக்கிறார் என்று பேசுகிறார்கள்.
நான் யார்னு காட்டுறேன்: சூப்பர் ஸ்டார், உலக நாயகனை இயக்கும் முருகதாஸ்?





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *