Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை.
  • கொரோனா பரவல் காரணமாக புதிய கட்டுபாடுகள் அறிவித்துள்ள தமிழக அரசு.
  • வீட்டிலே இருக்குமாறு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கும் சினிமா பிரபலங்கள்.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் உச்சத்தை எட்டியுள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் அல்லல்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக அரசும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் வீட்டிலே இருக்குமாறு திரையுலக பிரபலங்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.50 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை 10 லட்சத்து 81 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா இரண்டாவது அலை பல வித உயிர் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரானாவின் கோர தாண்டவம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனால் பலவித கட்டுப்பாடு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு ஊரடங்கு, திரையரங்குகள், வழிபாட்டு தலங்களுக்கு தடை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் இயங்க தடை உள்ளிட்ட பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீரெட்டியின் முகம் சுளிக்க வைக்கும் பேஸ்புக் பதிவு: ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் பவன் கல்யாண் ரசிகர்கள்!
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், பாதுகாப்பாக இருங்கள், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுங்கள். வைரஸ் அழிவை உருவாக்கி அதை வேகமாக உருவாக்குகிறது. தயவுசெய்து உங்கள் அன்புக்குரியவர்களையும் உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள், உங்களை உயிரைக் காப்பாற்றுங்கள் என்று உருக்கமாக பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதே போல் நடிகை நதியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொரோனா ஊரடங்கை குறித்து, ‘நீங்கள் வீட்டில் முடங்கிப் போய்விட்டதாக நினைக்காதீர்கள், நீங்கள் வீட்டில் பத்திரமாக இருக்கிறீர்கள் என்பது போல நினைத்துப் பாருங்கள’ என தனது ரசிர்களுக்கு அறிவுரை கொடுத்து இருக்கிறார். நடிகை நதியாவின் இந்தப் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *