Share on Social Media


மத்தியில் காங்., ஆட்சி!

கோவாவில் வெல்லும் கட்சி தான் லோக்சபா தேர்தலிலும் வெல்லும். இதற்கு கடந்த கால நிகழ்வுகள் சிறந்த உதாரணம். எனவே கோவாவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் காங்., கட்டாயம் வெற்றி பெறும். இதேபோல் 2024 லோக்சபா தேர்தலிலும் வென்று, மத்தியில் காங்., ஆட்சி அமைக்கும்.

– சிதம்பரம், மூத்த தலைவர், காங்கிரஸ்

சிக்க வைக்க சதி!

மஹாராஷ்டிராவில் வேண்டுமென்றே சிலரை குறிவைத்து, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தவறான நோக்கங்களுடன் செயல்பட்டு வருகின்றனர். சிலரை சிக்க வைக்க சதி நடக்கிறது.

– நவாப் மாலிக்மஹா., அமைச்சர், தேசியவாத காங்.,

உதவி தேவை!

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவற்றின் விலை அதிகரித்து வருவதால், நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிரமப்படும் மக்களுக்கு மத்திய – மாநில அரசுகள் உடனடியாக நிவாரண உதவிகளை செய்ய வேண்டும்.

– மாயாவதி, தலைவர், பகுஜன் சமாஜ்

Advertisement



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *