Share on Social Mediaஅடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமெனில் தினமும் ஒரு முட்டை சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். உண்மையில் இதை அச்சுபிசகாமல் கடைப்பிடித்தால் நிச்சயம் பயனுண்டு. முட்டை முடி வளர்ச்சிக்கு அவசியமான புரதங்களால் நிறைந்துள்ளது. முடி வளர்ச்சிக்கு புரதத்தின் முக்கியத்துவம் ஏன் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

​முடி வளர்ச்சிக்கு புரதம்

முடி வளர்ச்சிக்கு புரதம் அவசியம் என்பதை அறிந்திருப்போம். அதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒவ்வொரு தனி முடி இழையும் 88- 90% புரதம் கெரட்டின் கொண்டது. உடலில் புரதம் 20% உள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

நரைமுடி வந்தாலே வயசாயிடுச்சா என்ன, மருதாணியும் இண்டிகோவும் இப்படி யூஸ் பண்ணுங்க, அடர் கருப்பு நிறகூந்தல் கேரண்டி!

ஆனால் தினசரி உணவில் இருந்து ஆரோக்கியமான புரதத்தை பெற வேண்டும். இதனால் முடி வளர்ச்சி மட்டுமல்லாமல் உடலின் மற்ற செயல்பாடுகளும் திறம்பட கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

​போதுமான புரதம் உடலுக்கு கிடைக்காத போது என்ன நடக்கும்?

samayam tamil Tamil News Spot

எளிமையாக சொன்னால் உடலில் கிடைக்கும் புரதத்தின் அளவை உடல் சமன் செய்து ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் ஆண்டி பாடிகலை உற்பத்தி செய்து போன்ற மிக முக்கியமான செயல்பாடுகளுக்கு பயன்படுத்த தொடங்கும்.

முடி வளர்ச்சி மற்றும் திசுவை சரிசெய்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. உடலின் வழக்கமான செயல்பாடுகளுக்கு உயிர் வாழ்வதற்கு இனறியமையாத செயல்பாடுகள் தடைப்படுவதால் மயிர்க்கால்களுக்கு புரதசப்ளை துண்டிக்கப்படுகிறது. உங்கள் புரதக்குறைபாடு நீண்ட காலத்துக்கு நீடித்தால் முடி அதிகமான வறட்சியை எதிர்கொள்ளும். முடி நுனி உடையக்கூடும்.

தலைமுடியின் வளர்ச்சி சுழற்சியும் அதன் புரத்தேவைக்கு எந்த நேரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. முடியின் வளரும் தன்மை 90% அனஜென் ஆகும். இது சுமார் 3 முதல் 5 ஆண்டுகள் நீடிக்கும். பின்னர் இடைநிலை கட்டம் என்பது கேட்டஜன் ஆகும். இது இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். அதை தொடர்ந்து உதிர்தல் டெலாஜென் கட்டத்தில் பழைய முடி உதிர்கிறது.

புரதக்குறைபாடு முடியின் பெரும்பகுதியை ஒரே நேரத்தில் உதிர செய்துவிடும். அல்லது உதிரும் கட்டத்திற்கு செல்லும்படி கட்டாயப்படுத்தலாம். இதன் விளைவாக சராசரியாக முடி உதிர்தலை காட்டிலும் முடி அதிகமாக கொட்ட கூடும்.

பெரிய புரத குறைபாடு தொடர்பான முடி உதிர்தலை நீங்கள் எதிர்கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும் எனில் புரத சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

​புரத சிகிச்சைக்கு ஹேர் பேக்

samayam tamil Tamil News Spot

முடியின் சேதத்தை பொறுத்து நான்கு விதமான புரத சிகிச்சைகள் உண்டு. இது முடி இழைகளின் மேற்புறம் பூசக்கூடியது. இது மயிர்க்கால்கள் மற்றும் மயிர் இழைகளுக்கு வெளியே பூசுவதன் மூலம் வேலை செய்கின்றன.

புரோட்டின் பேக்குகள்: இவை இலேசாக சேதமடைந்த கூந்தலில் பயன்படுத்தப்பட வேண்டும். இவை 1 முதல் 2 மாதங்கள் வழக்கமாக பயன்படுத்தப்பட வேண்டும்.

இலேசான சிகிச்சைகள்: இவை சேதமடைந்த கூந்தலுக்கு உதவும். இதை வழக்கமாக பயன்படுத்தலாம். பெரும்பாலும் கண்டிஷனிங் ஃபேஸ்பேக் கடைகளில் கிடைக்கின்றன.

ஆழமாக ஊடுருவும் சிகிச்சைகள்: இவை மிதமான சேதமடைந்த முடியை ஆழமாக ஈரப்பதமாக்க வடிவமைக்கப்படுள்ளது. மற்றும் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.

முடியை மறுசீரமைக்கும் முறை: தினமும் தலைமுடியை சூடாக்கினால் முடி நிற சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டால் முடியை கடுமையான சேதத்தை எதிர்கொண்டிருக்கும். முதல் இரண்டு வாரங்களுக்கு மறு சீரமைப்பு முறையை பயன்படுத்த வேண்டும்.

​புரதம் மிகுந்த அசைவ உணவுகள்

samayam tamil Tamil News Spot

அதிக புரத உணவுகளை சாப்பிடுவதால் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் அவரி எடை அதிகரிக்க செய்யலாம் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை. தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய புரதச்சத்து நிறைந்த உணவுகள் உள்ளன.

புரதத்தை பற்றிய மற்றொரு தவறான கருத்து இறைச்சியில் இருந்து பெறமுடியும் என்பது. ஆனால் புரதம் அதிகம் உள்ள சைவ உணவுகளும் உண்டு. அப்படியான அசைவ மற்றும் சைவ உணவுகளை பார்க்கலாம்.

அசைவ உணவுகள்

முட்டையில் புரதம் மட்டுமின்றி ஆன் டி ஆக்ஸிடண்ட்கள், கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சுவாரஸ்யமாக முட்டை வெள்ளை 100% புரதத்தால் ஆனது.

பொடுகு உண்டாக்கும் 10 காரணங்கள் என்னென்ன? இனியாவது கவனமா இருங்க!

கோழியின் மார்பகம்

தோல் நீக்கிய கோழியின் நெஞ்சுப்பகுதி உணவில் சேர்க்ககூடிய ஆரோக்கியமான புரதச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாகும்.

ஒல்லியான மாட்டிறைச்சி: இந்த இறைச்சியில் புரதம், இரும்பு மற்றும் வைட்டமின் பி 12 நிறைந்துள்ளது.

டுனா: புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதை தவிர டுனாவில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது.

வான்கோழி மார்பகம்: தோல் நீக்கிய வான்கோழி மார்பகத்தில் அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி மற்றும் கொழுப்பு உள்ளது.

மீன்: அனைத்து வகையான மீன்களிலும் புரதம் மற்றும் இதயத்துக்கு ஆரோக்கியமான ஒமேகா 3கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

இறால் : நீங்கள் அதிக புரதம், வைட்டமின் பி 12, செஇனியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களை உட்கொள்ள விரும்பினல் தினசரி உணவில் இறால் சேர்க்கவும்.

சைவ உணவுகள்

samayam tamil Tamil News Spot

பருப்பு வகைகள் தாவர அடிப்படையிலான புரதங்களின் சிறந்த ஆதாரங்களில் ஒன்று. அவை இரும்பு, பொட்டாசியம், ஃபோலேட், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றிலும் நிறைந்துள்ளன.

பாதாம்: அற்புதமான உலர் பழங்கள் புரதம், வைட்டமின் ஈ, மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றால் நிரப்பப்பட்டுள்ளன.

ஓட்ஸ்; உங்கள் தினசரி டோஸ் புரதம் வைட்டமின் பி 1, மெக்னிசீயம், மாங்கனீசு மற்றும் நார்ச்சத்து பெற இந்த ஆரோக்கியமான தானியங்களை உங்கள் உணவில் சேர்க்கவும்.

ப்ரக்கோலி: பலர் ப்ரக்கோலியை சாபிட முடியாததாக சொல்லலாம். இதில் புரதம், பொட்டாசியம் வைட்டமி சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது.

சீமைத்தினை என்று அழைக்ககூடிய இது சூப்பர் ஃபுட் ஆகும். தானியத்தில் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது.

கோதுமை ரொட்டி, பாலி, தினை, சோயாபீன்ஸ், பருப்பு போன்றவை சேர்க்கலாம். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது.

பூசணி விதைகள்: இந்த ஒளி மற்றும் ஆரோக்கியமான சிற்றுண்டியில் புரதம், இரும்பு, துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.

பிரஸ்ஸல்ஸ் முளைகள்: பிரஸ்ஸல்ஸ் முளைகளில் புரதம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து உள்ளது.

வேர்க்கடலை: வேர்க்கடலை புரதம், மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்துக்கான சுவையான ஆதாரமாகும். புரத உட்கொள்ளலை அதிகரிக்க நீங்கள் வேர்க்கடலை வெண்ணெய் சேர்க்கலாம்.

கண்ணுக்கு கீழ் கருவளையம் போக, வராம தடுக்க, ஆயுர்வேத மருத்துவர் சொல்றதை கேளுங்க, நிச்சயம் போகும்!

பால் பொருள்களில் சீஸ் ஆரோக்கியமான புரதம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி நிரம்பியுள்ளது.

கிரேக்க தயிர்: இது அதிக அளவு புரதம் உள்ளது. எனினும் சர்க்கரை சேர்க்காததை எடுத்துகொள்ள வேண்டும்.

பால் தினசரி உணவில் சேர்க்காத போது புரதம், கால்சியம், ரிபோஃப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது.

புரதம் நிறைந்த உணவுகளை சேர்ப்பது அல்லது அதிகரிப்பது நிச்சயமாக முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முடி வளர்ச்சியை அதிகரிக்கும். இனி புரதம் சேருங்கள்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *