Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற பெண் எம்.பி.
  • வைரல் வீடியோ!

நியூசிலாந்து நாட்டின் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், பிரசவத்திற்காக, மருத்துவமனைக்கு சைக்கிளில் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

நியூசிலாந்து நாட்டின், பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜென்டர் என்பவருக்கு, அண்மையில், பிரசவ வலி ஏற்பட்டது. இதை அடுத்து, வீட்டில் இருந்த சைக்கிளை எடுத்துக் கொண்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரே ஓட்டிச் சென்றார். மருத்துவமனையை அடைந்த ஒரு மணி நேரத்தில், அவருக்கு அழகான குழந்தை பிறந்தது.

இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜென்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
இன்று அதிகாலை 3:04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம். பிரசவத்தின் போது, நான் சைக்கிளை ஓட்ட வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து விட்டது. மருத்துவமனைக்கு செல்வதற்காக அதிகாலை 2 மணிக்கு எழுந்த போது, பிரசவ வழி அவ்வளவு மோசமாக இல்லை.
செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர் – தேனிலவுக்கும் தயார்!
வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 2 – 3 நிமிடங்கள் ஆகும். இருந்த போதும், அங்கு சென்ற 10 நிமிடங்களில் பிரசவ வலி அதிகரித்தது. எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை பிறந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது முதல் பிரசவத்தின் போதும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜென்டர், சைக்கிளில் மருத்துவமனைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *