Share on Social Mediaதிருமணத்துக்கு தயாராகும் பெண்கள் திருமணநாளில் மிக அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் சருமத்துக்கு அதிக கவனம் கொடுக்க வேண்டும். அன்றைய தினம் அழகு கலை நிபுணர்களால் அழகுப்படுத்த செய்தாலும் முன்கூட்டிய சரும பராமரிப்பு மிகவும் அவசியம் என்கிறார் அழகு கலைஞர் பிரியங்கா குப்தா. அவர் கல்யாணப்பெண்ணுக்கு தரும் அழகு குறிப்புகள் குறித்து பார்க்கலாம்.

​சருமத்துக்கு சிடிஎம் ( CTM)

தினசரி சருமத்துக்கு சுத்தப்படுத்துதல், டோனிங், ஈரப்படுத்துதல் மூன்றையும் தவறாமல் செய்ய வேண்டும். இதனால் சருமம் இளமையாக அழகாக தோற்றமளிக்கும். தவறாமல் இதை செய்ய வேண்டும்.

முடி கொட்றதை நிறுத்தி வழுக்கை விழாமல் தடுக்க இதை ஃபாலோ பண்ணுங்க, ஆண்களுக்கானது!

​ஃபேஷியல் செய்யுங்கள்

samayam tamil Tamil News Spot

திருமணம் நிச்சயமான நாட்கள் முதலே ஆறு மாதங்களாக இருந்தாலும் பேஷியல் செய்ய தொடங்குங்கள்.இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சருமத்துக்கேற்ற ஃபேஷியல் செய்வதன் மூலம் முகத்தின் பொலிவு குறையாமல் பாதுகாக்கலாம்.

சருமத்துளைகளில் இவை பாதிப்பு உண்டாக்கிறதா என்பதை அறிந்துகொள்ள எந்த புதிய பொருளை பயன்படுத்தினாலும் அதை உபயோகிப்பதற்கு முன்பு சருமப்பரிசோதனை செய்வது அவசியம்.

​கைகள், கால்களையும் அழகாக்கவும்

samayam tamil Tamil News Spot

இரவில் தினமும் தூங்குவதற்கு முன்பு ஆலிவ் எண்ணெய் மசாஜ் செய்வதன் மூலம் கைகளையும், கால்களையும் மென்மையாக காட்டலாம். இது உலர்ந்த துளைகளை அகற்றும். விரல்களையும், பாதத்தையும் மென்மையாகவும் வைத்திருக்கும். குளியல் நேரத்தில் ப்யூமிஸ் கல் பயன்படுத்தலாம். இதனால் இறந்த செல்களை வெளியேறும்.

​தேவையற்ற முடியை அகற்றுங்கள்

samayam tamil Tamil News Spot

உங்கள் சருமத்தில் இருக்கும் தேவையற்ற முடியை நீங்கள் அப்புறப்படுத்துவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். இது முகத்தில் இருக்கும் தேவையற்ற முடி என்றில்லாமல் கைகள், கால்களில் இருக்கும் முடிகளையும் அகற்றும் பழக்கம் இருந்தால் அதையும் தவிர்க்க வேண்டாம்.

ஏனெனில் திருமணநாளுக்கு அருகில் முடியை அப்புறப்படுத்தினால் அது சிறிய வெட்டுகள், சொறி போன்றவற்றை கொண்டுவரலாம். அதனால் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்துக்கு ஒரு முறை இதை செய்து வருவது நல்லது.

​உடற்பயிற்சியை தவிர்க்காதீர்கள்

samayam tamil Tamil News Spot

திருமணம் முடிந்த கையோடு உடல் உழைப்பை மறந்துவிட வேண்டாம். தினசரி உடற்பயிற்சி செய்தவர்கள் எடையை கட்டுக்குள் வைக்க உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டாம்.

புருவம் பென்சில் மாதிரி இருக்கா, அடர்த்தியா காட்டுவது எப்படி? புருவம் அழகா இருக்க இந்த 5 விஷயம் செய்யுங்க!

ஜிம் செல்லும் வழக்கம் இருந்தாலும் அதை தவிர்க்காமல் செய்யுங்கள். குறிப்பாக எடையை அதிகரிக்க செய்யும் வயிறு மற்றும் தொடைகள் போன்ற சிக்கலான பகுதிகளில் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்ள வேண்டும்.

​தியானம்

samayam tamil Tamil News Spot

நாள்தோறும் 15 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க செய்யலாம். திருமணத்துக்கு முன்பு பெண்கள் பல குழப்பத்தில் இருப்பார்கள்.

இதனால் மன அழுத்தம் உண்டாக வாய்ப்புண்டு. தினசரி 10 நிமிடங்கள் தியானம் செய்வதன் மூலம் மன அழுத்தம் இல்லாமல் தெளிவாக இருப்பீர்கள்.

​தூக்கம்

samayam tamil Tamil News Spot

உண்மையிலேயே ஆழமான தூக்கம் என்பது சருமத்துக்கு அவசியமானதும் கூட. தூக்கமின்மை இருண்ட வட்டங்களை உண்டாக்கும். சருமத்தில் பளபளப்பான துளைகள், கண்களுக்கு கீழ் இருண்ட வட்டங்கள் தோன்றினால் உங்கள் திருமணநாளில் உங்களின் அழகு நீங்கள் எதிர்பார்த்தது போல் இருக்காது.

​ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்

samayam tamil Tamil News Spot

உங்கள் சருமம் நச்சில்லாமல் இருக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீரை குடியுங்கள். அவ்வபோது இளநீர் குடிக்கலாம். உணவில் காய்கறிகள், பழங்கள், சத்தான உணவுகள், புரதம் உள்ளடக்கிய சீரான எடை கட்டுப்பாட்டு திட்டத்தை கடைபிடியுங்கள்.

சிப்ஸ் வகைகள், சாக்லேட்டுகள், ஐஸ்க்ரீம்கள், சோடாக்கள் போன்ற குப்பை உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது வீக்கம் மற்றும் சருமத்துளைகள் தோலில் பிரச்சனைகளை உண்டாக்கின்றன. அதனால் கட்டுக்குள் வையுங்கள்.

​மசாஜ் செய்து கொள்வது நல்லது

samayam tamil Tamil News Spot

திருமண அழுத்தத்திலிருந்து விடுபட ஸ்பாக்களுக்கு சென்று மசாஜ் செய்து கொள்ளலாம். திருணத்தன்று பயன்படுத்தும் பொருள்களை அன்றைய தினத்தில் முயற்சிக்காமல் முன்கூட்டியே பயன்படுத்தி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

பிரகாசமான முகம்: நிறம் அதிகரித்து சுருக்கம் குறைய கிவி ஃபேஸ் மாஸ்க், எப்படி எதனுடன் பயன்படுத்தலாம்?

உங்கள் சருமத்துக்கேற்றதை பரிசோதிப்பதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம்.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *