Share on Social Media


மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ டைட்டில் லுக் போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் துவங்கியுள்ளது.

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் ‘பொன்னியன் செல்வன்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியிலே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கில் ஒருசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மீண்டும் ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

ஹன்சிகா மட்டும் நடிக்கும் ‘105 மினிட்ஸ்’: படப்பிடிப்பு துவக்கம்!
அதனை தொடர்ந்து கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. முதல் பாகத்தின் 70 சதவீத படபிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து, ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்று புதுச்சேரியில் துவங்கியுள்ளது.

அதனை தொடர்ந்து ஹைதராபாத்தில் படத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட அரங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியானது. போஸ்டரில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது என்பதை உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர். மேலும் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *