Share on Social Media


கன்னியாகுமாரி மாவட்டம் நித்திராவிளை அருகே பூத்துறை  பகுதியில் வசித்து வருபவர் சாயு பிறைட்.  இவரது மகள் ஜெர்சிலின் (19).  இவருக்கும், அதே ஊரை சேர்ந்த மீன்பிடி  தொழிலாளி ஸ்டெனோ ஸ்டாலின்(30) என்பவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு சில நாட்களில் காதலாக மாறியது.  இதனையடுத்து இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரியவர ஜெர்சிலினின் பெற்றோர் அவரை கண்டித்தனர்.

ALSO READ | விஷமாக மாறிய உணவு, 10 மணிநேர போராட்டம் வாபஸ்: நடந்தது என்ன?

இதனையடுத்து ஜெர்சிலினும் – ஸ்டாலினும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.  அதன்படி கடந்த 6-ம் தேதியன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்.  ஜெர்சிலினின் பெற்றோர் மகளை காணவில்லை என்று பல இடங்களிலும் தேடிவிட்டு பின்னர் நித்திரவிளை போலீஸில் மகளை காணவில்லை என்று புகார் அளித்தனர்.  போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட காதல் ஜோடி காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும்,  வேளாங்கண்ணி  சென்று ஒரு பெந்தெகொஸ்த் சபையில் திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.  இதுகுறித்து காவல் நிலையத்திலிருந்து ஜெர்சிலின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  காவல்நிலையத்திற்கு வந்த பெண்ணின் பெற்றோர் மகளை தங்களோடு வந்து விடுமாறு கூறினர், ஆனால் அவர் பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் ஜெர்சிலினை தாக்க முயன்றனர்.  அதனையடுத்து காவல் நிலையத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது, பின்னர் தாக்க முயன்றவர்களை போலீசார் விரட்டியடித்தனர்.  மேலும் ஜெர்சிலின் அணிந்திருந்த செயினை மட்டும் கழட்டி தருமாறு கேட்டு வாங்கிக்கொண்டு சென்றுவிட்டனர்.  அதனையடுத்து காதல் ஜோடிகளை சார் பதிவாளர்  அலுவலகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் திருமணத்தை முறைப்படி பதிவு செய்து அதன் நகலை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறியதையடுத்து, அந்த ஜோடிகளை ஸ்டாலினின் பெற்றோருடன் அனுப்பி வைத்து விட்டனர்.

ALSO READ | சிறுமி உடல் கருகி இறப்பு – குற்றவாளியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.