1604332863 pic Tamil News Spot
Share on Social Media

நிமோனியா என்பது ஒரு சுவாசக் கோளாறு ஆகும். இது பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்று காரணமாக ஏற்படுகிறது; மற்றும் இது நுரையீரலில் ஏற்படும் அழற்சியால் வகைப்படுத்தப்படுகிறது. இது முதன்மையாக அல்வியோலியை பாதிக்கிறது. அல்வியோலி என்பது நுரையீரலில் இருக்கக்கூடிய சிறிய காற்று சாக்ஸ் (ஏர் சாக்ஸ்). ஆகும். இது பெரும்பாலும் இருமல், தும்மல் அல்லது சுவாசக் காற்று வழியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது.

​அறிகுறிகள்

samayam tamil Tamil News Spot

நிமோனியா இருந்தால், நீங்கள் இருமல், காய்ச்சல், நடுக்கம், குளிர் மற்றும் மூச்சுத் திணறல் போன்றவற்றை அனுபவிக்க நேரிடும்.

தலைவலி, பசியின்மை, சோர்வு, வியர்வை, குமட்டல் மற்றும் வாந்தி, தசை வலி, மற்றும் ஆழமாக சுவாசிக்கும் போது அல்லது இருமும் போது ஏற்படும் மார்பு வலி, ஆகியவை நிமோனியாவின் பிற பொதுவான அறிகுறிகள் ஆகும். நிமோனியா தொற்று நோய் உள்ள பெரியவர்கள் குழப்பம் அல்லது மயக்கம் போன்றவற்றை அனுபவிக்கக் கூடும்.

பெரும்பாலும், நிமோனியா தொற்று நோய் ஆனது, இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் குணமாகக் கூடியது தான். ஆனால் சில நேரங்களில், இது மிகவும் தீவிரமடைந்து, அபாயகரமானதாக கூட மாற வாய்ப்பு உள்ளது.

​காரணங்கள்

samayam tamil Tamil News Spot

குழந்தைகள், பெரியோர்கள், வயதானவர்கள் போன்றோருக்கு மிகவும் ஆபத்தானது. மேலும், பலவீனமான நோய் எதிர்ப்பு அமைப்பு அல்லது அடிப்படை சுகாதார பிரச்சினைகள் உள்ள நபர்களுக்கும் இது ஆபத்தான ஒன்றாக உள்ளது. உண்மையில், நிமோனியா தொற்று நோயின் காரணமாக தான், நிறைய குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறார்கள். பின்வரும் பழக்க வழக்கங்களை உங்கள் வாழ்க்கை முறையில் சேர்ப்பதன் மூலம் உங்களுக்கு நிமோனியா தொற்று நோய் ஏற்படுவதை நீங்கள் தடுக்கலாம்.

நீங்கள் எடை இழப்பு பயணத்தில் இருந்தால் தவிர்க்க வேண்டிய காலை உணவுகள் இவைகள் தான்

​கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்:

samayam tamil Tamil News Spot

நிமோனியாவுக்கு வழிவகுக்கும் சுவாச நோய்த் தொற்றுகளைத் தவிர்க்கும் பொருட்டு, உங்கள் கைகளை நீங்கள் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். குறிப்பாக, உணவு சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும் உங்கள் கைகளை தவறாமல் கழுவ வேண்டும்.

​ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்:

samayam tamil Tamil News Spot

உங்கள் உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களின் செயல்பாட்டிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற நீங்கள் பல வகையான உணவுகளை சாப்பிட்டு வருகுறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேலும், பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்துப் போராடவும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கவும் நமக்கு ஆரோக்கியமான உணவு மிகவும் அவசியம் ஆகும்.

நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 இரத்தக் கோளாறு நோய்கள் என்னென்ன?…

​வழக்கமாக உடற்பயிற்சி செய்யுங்கள்:

samayam tamil Tamil News Spot

உடற்பயிற்சி ஆனது, ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அவை நோய்க்கு எதிராக நம் உடலைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உடல் செயல்பாடு ஆனது, நுரையீரல் மற்றும் காற்றுப் பாதைகளில் இருந்து கிருமிகளை வெளியேற்ற நம் உடலுக்கு உதவுகிறது. இதன் மூலம், சளி, காய்ச்சல் அல்லது நிமோனியா வருவதற்கான வாய்ப்பை இது குறைக்கவும்.

​ஒரு நல்ல உறக்கத்தை பெறுங்கள்:

samayam tamil Tamil News Spot

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு, போதுமான தூக்கத்தை பெறுவது மிகவும் அவசியம் ஆகும். மேலும், உங்களின் உடல் சிறந்த முறையில் செயல்படுவதற்கும் ஒரு நல்ல தூக்கம் தேவை. அது மட்டுமின்றி, நடுத்தர வயதில் இருக்கக்கூடிய நபர்களுக்கு, தினமும் இரவில் 7 முதல் 8 மணிநேரம் வரை, தூக்கம் தேவைப்படுகிறது.

லோ- கார்போ டயட்ல இருக்கிறவங்க நிறைய சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

​தடுப்பதற்கு தடுப்பூசி

samayam tamil Tamil News Spot

இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடிய மற்றும் நிமோனியாவின் அபாயத்தை அதிகரிக்கூடிய காய்ச்சலைக் குறைக்கும். இதன் மூலம் இந்த நோயின் தீவிரத்தை குறைக்க உங்களுக்கு உதவியாக இருக்கும். நிமோனியா தடுப்பூசிகள் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், மற்றும் 65 வயதிற்கு மேல் உள்ள பெரியவர்களுக்கும் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், பிற நிபந்தனைகளின் காரணமாக, இதன் அபாயம் அதிகரிக்க வாய்ப்புள்ள நபர்களும் மற்றும் அதிக ஆபத்தில் இருக்கும் வயதானவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு இந்த தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகின்றன.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *