Share on Social Media


சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொது குழு கூட்டம் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.  இரண்டு வருடங்களுக்கு பிறகு மருத்துவர் ராமதாஸ் சேலம் வந்ததால் அவரை சந்திக்க ஏராளமான தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இந்த கூட்டத்தில், சேலம் மாநகரம் , ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, வீரபாண்டி, ஏற்காடு, ஓமலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பாமக தொண்டர்கள் ஆயிரக்கனக்கானோர் பங்கேற்றனர். 

கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

மருத்துவர் ராமதாஸ் (Doctor S Ramadoss) சிறப்புரை ஆற்றிய போது, “பாமக ஆட்சி நடைபெற வேண்டும், அதற்காக தனித்து நின்று அன்புமணியை முன்னிலை படுத்தி தேர்தலிலும் போட்டியிட்டோம். 

கடுமையாக உழைத்தும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவியைக் கூட அப்போது பெறவில்லை. வட தமிழ்நாட்டில் வாழும் அனேக மக்களும் வன்னியர்கள். ஒட்டு மொத்த மக்களும் வாக்களித்திருந்தால் வெற்றி பெற்று இருக்கலாம்.

அனைத்து சமுதாயத்தினரும்  ஒரு தாய் மக்களாக வாழ வேண்டும் என்று 45 வருடங்களாக போராடி வருகின்றேன். அதற்காக போராடி உயிர் பலி கொடுத்தும் உள்ளோம். அப்படி போராடிய நான் சரியாக  வழி நடத்தவில்லையா? என்ன தவறு செய்தேன்? வழி நடத்திய என்னிடம் என்ன தவறு உள்ளது?” என  தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார். 

“தனி இட ஒதுக்கீடு என 10.5 விழுக்காடு பெற்றும் நீதிபதி அதற்கு எதிரான தீர்ப்பை வழங்கியுள்ளார். தனி இட ஒதுக்கீட்டை முன்பே பெற்றிருந்தால் யாரிடமும் கூட்டு சேர தேவை இருந்து இருக்காது. 

பாமக வினர் வெற்றி பெற கூடாது என்று கூட்டணி கட்சிகள் கூட்டணி தர்மத்தை மீறுகின்றன. அதனாலேயே 20 தொகுதியில்  வெற்றி பெற வேண்டிய பாமக 5 தொகுதிகளை மட்டுமே பெற முடிந்தது” என்றார்.

ALSO READ | இலங்கையுடன் இந்தியா ராணுவ ஒத்துழைப்பு ஈழத்தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகம்: பாமக 

234 தொகுதியில் பாமக விற்கு வெறும் 23 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட பிறரிடம் அதிக சீட்டு வேண்டும் என்று கெஞ்ச வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது வேதனையாக உள்ளது. இந்நிலையால் மானம் உள்ளவராக , கோபம் வர வேண்டாமா, ரோசம் வர வேண்டாமா? என்றார் டாக்டர் ராமதாஸ். 

“இன்னும் நாம் ஏமாளிகளாக இருந்தது போதும் , வீர வன்னியர்களாக தமிழகத்தை ஆளுவேன் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

பணத்திற்காக ஆசைபட்டு , மானத்தை வீரத்தை அவர்களிடம் கொடுத்துவிட வேண்டுமா என கேள்வி எழுப்பிய ராமதாஸ், இனி வரும் காலத்தில் பணம் முக்கியம் இல்லை  மானம் தான் முக்கியம் என்று வீரத்துடன் செயல்படுவோம் என்றார்.  

“இதுவரை எந்த கட்சி வன்னியர்களுக்காக போராடியது?  நான் தான் தான் தொடர்ந்து போராடி வருகிறேன். வன்னியர்களுக்கு இன்னொரு ராதமாஸ் பிறக்க போவதில்லை , இனி முடிவு செய்ய வேண்டியது வன்னியர்கள் தான்.” என்றார் அவர்.

வன்னியர்கள் வேறு கட்சியில் இருந்தாலும் சரி, பாமக விற்கு வர வேண்டாம் வாக்கு மட்டும் பாமக விற்கு அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 

“நாள்தோறும் அறிக்கை வெளியிடுகிறேன், அதில் வன்னியர்களுக்காக மட்டுமா அறிக்கை வெளியிடுகிறேன்? ஒட்டு மொத்த  தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறேன்.” என்று கூறினார் டாக்டர் ராமதாஸ்.

எந்த அரசியல் கட்சி (Political Parties) தலைவர்களுக்கும் இல்லாத அக்கரை தனக்கு தான் உள்ளது. 

அனைவரையும் ஆதரித்துவிட்டீர்கள் ஒரு முறை அன்புமணியை ஆதரியுங்கள், என அவர் கேட்டுக் கொண்டார். பிற கட்சி வன்னியர்களை சந்தித்து ஆதரவு திரட்டுங்கள், பாட்டாளி மக்கள் கட்சி ஆட்சியை கொண்டு வரவேண்டும், அதற்காக  வர உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை பெற செய்யுங்கள் என டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் அருள் மற்றும் சதாசிவம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாமக தலைவர் கோ.க மணி,  துணை தலைவர் கார்த்தி, மாவட்ட செயலாளர்கள் நடராஜ் , அண்ணாதுரை, விஜயராஜா, பசுமை தாயக மாநில துணை அமைப்பாளர் சத்திரிசேகர், மாநகர முன்னாள் செயலாளர் ரத்தினம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ | தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த பாமக நிறுவனர் ராமதாஸ் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *