Share on Social Media


Petrol Prices Latest Update: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் 2 முறை,  நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.

ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum),  ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum), இந்தியன் ஆயில் (Indian Oil) ஆகிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலைகளை  தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

ALSO READ: Post Office: ATM கார்டு, பரிவர்த்தனை தொடர்பான விதிகளில் முக்கிய மாற்றம்..!!!

கடந்த சில நாட்களாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலைகளை (Petrol, Diesel Price)  அதிகரித்து வருகின்றன

 சென்னையில் நேற்றைய பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.40 ஆக விற்பனை செய்யப்பட்டது. அதே போன்று டீசல் விலை ரூ.98.26 என்ற விலையில் விற்கப்பட்டது.

இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 30 காசுகள் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.102.70 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 33 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.98.58 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் முழுமையான லாக்டவுன்  அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது  என்பதோடு, பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *