1602792496 pic Tamil News Spot
Share on Social Media

இந்தியாவினை அச்சுறுத்தும் மிக முக்கிய புற்றுநோய் வகையாக குடல் புற்றுநோய் உருவாகி வருகிறது. அதிகம் பேரிடம் இந்த புற்று நோய் உருவாகுவது அதிர்ச்சி அளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது. முதலில் புற்று நோய் என்பது, நம் உடலில் லட்சக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி வேலைகள் பிரித்து கொடுக்கப்பட்டு அவை அதன்படி செயல்படுகின்றன. இந்த நிலையில், ஏதாவது ஒரு அணுவானது தனக்கு நிர்ணயிக்கப்பட்ட செயலுக்கு மாறாக தான்தோன்றி தனமாக செயல்படும் பொழுது உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதை தான் நாம் புற்று நோய் என்று சொல்கிறோம்.

​குடல் புற்றுநோய் அறிகுறிகள்

samayam tamil Tamil News Spot

காசினோமா எனப்படும் இந்த குடல் புற்று நோயானது, குடலின் வலது அல்லது இடது பகுதியினை பாதிக்கின்றது. அது பாதிக்கும் பகுதியினை பொறுத்து நோயிக்கான அறிகுறிகள் மாறுபடுகின்றன. அதாவது, குடலின் வலது பகுதியினை நோய் பாதித்தால், மலமானது கருமையான நிறத்திலோ அல்லது நீராகவோ வெளியேறும். குடலின் இடது பகுதியினை நோய் பாதித்தால், மனித கழிவுடன் சேர்ந்து அடிக்கடி இரத்தம் வெளியேறுவது அல்லது தனியாகவே இரத்தம் வெளியேறுவது, அடிக்கடி மலம் கழித்தல் அல்லது நான்கு நாட்களுக்கு மேலாக மலம் வெளியேறாமல் இருத்தல், அதன் மூலம் கடுமையான வயிறு வலி உருவாகுதல் போன்றவை குடல் புற்றுநோயிக்கான அறிகுறிகள் ஆகும்.

​ஆபத்துகள்

samayam tamil Tamil News Spot

அனைத்து அறிகுறிகள் அல்லது ஏதேனும் ஒரு அறிகுறி இருந்தாலும் கூட உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டியது கட்டாயம் ஆகும். இதே அறிகுறிகள் தான் மூலம் நோயிக்கான அறிகுறியாக இருப்பினும் அது குடல் புற்றுநோயிக்கும் பொருந்த கூடியது ஆகும். நாமே முன்முடிவுக்கு வராமல் மருத்துவர்கள் ஆலோசனை பெறுவது அவசியமாகும். புற்று நோயினை பொருத்தவரை நமக்கு ஒரே ஒரு வாய்ப்பு தான் வழங்கப்படும். அதன் ஆரம்ப காலக்கட்டத்திலே அதனை கண்டறிந்து அகற்றி விட வேண்டும், அந்த வாய்ப்பினை நாம் தவற விட்டு விட்டால் பெரும் ஆபத்தினை நாம் சந்திக்க வேண்டியது வரும்.

​யாருக்கு அதிகம் வரும்?

samayam tamil Tamil News Spot

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களை இந்த நோயானது அதிகம் பாதிக்கின்றது. மற்ற புற்றுநோய்களை போலவே இதையும் ஆரம்ப காலக்கட்டத்தில் கண்டறிந்து விட்டால் சிறப்பாகும். மேலும், இது தொற்று நோய் அல்ல, எனவே தேவையற்ற பயத்தினை தவிர்ப்பது நல்லது. பெரும் சேதங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். மருத்துவர்கள் உடலை ஸ்கேன் செய்து பார்த்து புற்று நோயின் வகை மற்றும் தன்மையினை கண்டறிய முடியும். மேலும் இந்த குடல் புற்று நோயானது, மலக்குடல் மற்றும் பெருங்குடல் என்ற இரண்டு வகையான புற்றுநோய்கள் இருக்கிறது.

தாய்ப்பாலூட்டும் சமயங்களில் பெண்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? எப்படி குடிக்க வேண்டும்…

​சிகிச்சை முறைகள்

samayam tamil Tamil News Spot

பெருங்குடலில் புற்று நோய் கண்டறியப்பட்டால், முதலில் சிடி ஸ்கேன் மூலம் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவினை மருத்துவர்கள் கண்டறிந்து அறுவை சிகிச்சையின் மூலம் கட்டி அகற்றப்படுகிறது. மேலும், மலக்குடலில் எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் கட்டியின் இருப்பிடம் மற்றும் அளவினை மருத்துவர்கள் கண்டறிவார்கள். மலக்குடலில் புற்று நோய் கண்டறியும் பொழுது மருத்துவர்கள் உடனடியாக கட்டியை அகற்றுவதில்லை. மாறாக, ரேடியோதெரபி மற்றும் ஹீமோதெரபி போன்ற சிகிச்சை முறைகள் முதலில் பின்பற்றப்படுகின்றன. அது உடலில் நல்ல முன்னேற்றத்தினை அளித்த பிறகு, அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

​அறுவை சிகிச்சை

samayam tamil Tamil News Spot

அதாவது, கட்டியின் அளவை குறைப்பது, கட்டியானது புற்று நோயின் அடுத்த கட்டத்திற்கு போகாமல் தடுப்பது, கட்டி பரவுவதை தடுப்பது தான் இந்த தெரபிக்களின் மிக முக்கிய பங்களிப்பாகும். அதன் பிறகு கட்டியினை நீக்கும் அறுவை சிகிச்சையினை மருத்துவர்களால் எளிதில் மேற்கொள்ள முடிகிறது.

புற்று நோயிக்கான அறுவை சிகிச்சையானது இரண்டு வகைகளில் செய்யப்படுகிறது. லேப்ரோஸ்கோபி எனப்படும் முறையிலும் உடலில் துளையிட்டு அந்த புற்றுநோய் கட்டியினை அகற்ற முடியும் அல்லது வழக்கம்போல செய்யப்படும் அறுவை சிகிச்சையின் மூலமும் கட்டியினை அகற்ற முடியும். புற்றுநோய் கட்டியின் இருப்பிடம் மற்றும் தன்மையினை பொறுத்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சை முறையினை தீர்மானிப்பார்கள்.

இந்த 6 உணவுகளும் மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமாம்… பார்த்து சாப்பிடுங்க…

​தடுப்பு முறைகள்

samayam tamil Tamil News Spot

இந்த ஆபாயக்கரமான புற்றுநோயினை நம் உடலிற்கு வர அனுமதிக்காமல் தடுக்க நாம் சில வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமாகும். முதலில், உடல் எடை அதிகரிப்பதை தடுக்க வேண்டும், உடல் தேவைக்கு அதிகமான உணவினை உட்கொள்வதையும் தடுக்க வேண்டும். மேலும், நம் உடலுக்கு பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்த கூடிய புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் பழக்கமானது குடல் புற்று நோயை உருவாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே. புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதலை முற்றிலுமாக கைவிட வேண்டும். போதை பொருட்களின் பயன்பாட்டினால் உடல் எதிர்ப்பு சக்தியை அதிகம் இழப்பதால் சிகிச்சைக்கு பிறகும் உடல் வலி போன்ற பெரும் பாதிப்புகள் உருவாகும். மேலும், தினமும் முப்பது நிமிடங்களாவது நல்ல காற்றோட்டமான இடங்களான சாலைகள், பூங்காக்கள், வீட்டு மொட்டை மாடி போன்ற இடங்களில் நடைபயிற்சி அவசியமாகும். மேலும், சமச்சீரான உணவினை உட்கொள்ள வேண்டும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *