Share on Social Media


புதுடெல்லி: இஸ்ரேலிய கண்காணிப்பு மென்பொருள் நிறுவனமான NSO குழுமம் உலகளவில் உள்ள அரசாங்க அதிகாரிகள் அதன் பெகாசஸ் ஸ்பைவேரைப் பயன்படுத்துவதற்கு தடைவிதித்துள்ளது. தனது மென்பொருளின் தவறான பயன்பாடு குறித்து கண்டறியப்படும் வரை இந்த தடை இருக்கும் என NSO தெரிவித்துள்ளது.

NPR இன் அறிக்கையின்படி, இஸ்ரேலிய அரசாங்க நிறுவனங்கள் புதன்கிழமை NSO குழுவின் சில அலுவலகங்களுக்குச் சென்று நிறுவனத்திற்கு எதிரான தவறான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தினர்.

ஊடக நிறுவனங்களின் கூட்டமைப்பான பெகாசஸ் திட்டம், NSO இன் பெகாசஸ் ஸ்பைவேர் ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் அரச தலைவர்கள் உள்ளிட்டோரின் தொலைபேசிகளை ஹேக் செய்து கண்காணிக்க பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது.

சில வாடிக்கையாளர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஒரு சிலர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் NPR இடம் நிறுவனத்தின் ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

ALSO READ:Pegasus: ஜனநாயகத்தின் ஆன்மாவை மோடி, அமித் ஷா காயப்படுத்தி விட்டார்கள்: ராகுல் தாக்கு

பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மாக்ரோன், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் ஆகியோருக்கு எதிராக வேவு பார்க்கும் செயல்கள் நடந்திருப்பதாக வந்துள்ள புகார்களுக்கு மத்தியில் கான்ஸ்ஸ் புதன்கிழமை பாரிஸுக்கு வந்தார்.

கான்ட்ஸ் தனது பிரெஞ்சு சகாவான புளோரன்ஸ் பார்லிக்கு இஸ்ரேல் இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக உறுதியளித்தார்.

பெகாசஸ் ‘தேசிய பாதுகாப்பின் முக்கிய பிரச்சினை’: காங்கிரஸ்

கடந்த வாரம் NSO இன் கண்காணிப்பு மென்பொருளை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்ய இஸ்ரேல் ஒரு குழுவை அமைத்தது. மேலும் “உரிமங்களை வழங்குவதற்கான முழு விஷயத்தையும் மறுபரிசீலனை செய்வதற்கான” சாத்தியத்தையும் சுட்டிக்காட்டியது.

இதற்கிடையில், இந்தியாவில், பெகாசஸ் (Pegasus) விவகாரம் “தேசிய பாதுகாப்பின் முக்கிய பிரச்சினை” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

மூத்த காங்கிரஸ் (Congress) தலைவரும், ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே வெள்ளிக்கிழமை பெகாசஸ் பிரச்சினை மக்களின் சுதந்திரத்தின் பிரச்சினை என்றும், மத்திய அரசு அதை ஜனநாயக அமைப்பில் குறைத்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

பல இந்திய அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் பெயர்கள் கசிந்த பட்டியலில் தோன்றியுள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

பெகாசஸ் சூறையாடல் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து நிறுத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இந்த சர்ச்சை “ஒரு பிரச்சினை அல்ல” என்றும், மக்கள் தொடர்பான பிரச்சினைகளில் விவாதத்திற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் கூறினார்.

ALSO READ: Pegasus: உளவு பார்த்ததாக கூறவில்லை என அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அடித்த பல்டி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *