Share on Social Media

கெய்லுக்காக மொயீன் அலியை தோனி அழைத்து வருவார் என எதிர்பார்க்க, சர்ப்ரைஸாக சஹாரையே தொடர்ந்து வீச வைத்தார் தோனி. இந்த ஐடியாவுக்கு ஒன்றல்ல… இரண்டு லட்டுகள் சென்னை அணிக்கு சுலபமாக கிடைத்தது. சஹார் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை கெய்ல் பவுண்டரிக்கு முயற்சி செய்து தட்டிவிட பாயிண்ட்டில் நின்ற ஜடேஜா பாய்ந்து பிடித்து கெய்லை அவுட் ஆக்கினார். அடுத்து க்ரீஸுக்குள் வந்த நிக்கோலஸ் பூரனையும் இரண்டே பந்தில் வெளியேற்றினார் சஹார். முதல் பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே ஷார்ட்டாக வீசிவிட்டு இரண்டாவது பந்தை லெக் ஸ்டம்ப் லைனில் ஷார்ட்டாக வீசுவார் சஹார். அந்தப் பந்தில் பெரிய ஷாட் முயன்று தூக்கியடித்து ஃபைன் லெக்கில் ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார் பூரன்.

பவர்ப்ளேக்குள்ளாகவே பஞ்சாப் அணியின் அபாயகரமான பேட்ஸ்மேன்கள் அத்தனை பேரும் காலி. ஆனாலும், சஹாரை ஒரேடியாக 4 ஓவர்களை வீச வைத்துவிட தோனி முடிவு செய்தார். அந்த ஓவரிலும் தீபக் ஹூடாவின் விக்கெட்டை வீழ்த்தி கெத்து காட்டினார் தீபக் சஹார். முதல் 7 ஓவருக்குள்ளாகவே தனது 4 ஓவர் ஸ்பெல்லை முடித்திருந்தார் சஹார். இதில் மயங்க் அகர்வால், கெய்ல், பூரன், தீபக் ஹூடா என பஞ்சாபின் பேட்டிங் ஆர்டர் மொத்தத்தையுமே சிதைத்துவிட்டார். 4 ஓவரில் ஒரு மெய்டனோடு 18 டாட்களையும் வீசி தனது கரியரில் ஆகச்சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாக இந்த ஸ்பெல்லை முடித்தார் சஹார்.

பஞ்சாபின் கதை முடிந்தது என நினைக்கும் போது சிஎஸ்கேவின் தொப்புள் கொடி உறவான ஷாருக்கான் மட்டும் நிலைத்து நின்று ஒற்றை ஆளாக அந்த அணிக்காக போராடினார். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு அடித்துவிட்டு மற்ற பந்துகளை பார்த்து நிதானமாக பொறுப்போடு ஆடினார் ஷாருக்கான். டெத் ஓவர்களில் ஷாருக்கானின் விக்கெட்டை எடுக்க முயலாமல் வைடு லைனில் வீசி அவருக்கு பவுண்டரி கொடுக்காமல் இருப்பதிலேயே முழுக்கவனத்தையும் செலுத்தியிருப்பார் ஷர்துல் தாகூர். பௌலரை இப்படி ஒரு தற்காப்பு மனநிலைக்கு தள்ளியதே ஷாருக்கானுக்கு மிகப்பெரிய வெற்றிதான்.

ஷாரூக்கான் | PBKS v CSK | IPL 2021

ஷாரூக்கான் | PBKS v CSK | IPL 2021

நன்றாக ஆடிக்கொண்டிருந்தவர் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கையில், சாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் சிக்சருக்கு முயன்று ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். ஷாருக்கான் 47 ரன்களை அடித்திருந்தார். இந்த 47 ரன்கள்தான் பஞ்சாப் அணி எதோ சொல்லிக்கொள்ளுமளவுக்கு மூன்று இலக்க ஸ்கோரை எட்ட உதவியது.

Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *