Share on Social Media


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதற்காக இம்ரான் கான் அரசை அகற்றக் கோரி பொதுமக்கள் தெருக்களில் கொந்தளித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் முன்னாள் பிரதமர் ராஜா பரூக் ஹைதர், பாகிஸ்தான் திவாலாகும் நிலையில் இருப்பதாக கூறினார்.

இம்ரான் கானின் (Imran Khan) கொள்கைகளால் எந்த பயனும் இல்லை என்று ஹைதர் கருத்து தெரிவித்துள்ளார். இப்போது, ​​நாடு திவால் ஆகிவிட்டத்து என எப்போது வேண்டுமானாலும் அரசு அறிவிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்துப் பொருட்களின் விலைகளும் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மாவு மற்றும் சீனியின் விலைகள்கூட ஏன் ஏற்றம் கண்டுள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். “மாவு மற்றும் சர்க்கரை வாங்குவதற்கு வெளிநாட்டு நாணயம் அல்லது டாலர்கள் தேவையில்லை. ஏனென்றால் அவை உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அவற்றின் விலையும் ஏன் உயர்ந்துள்ளது?” என்று அவர் கேட்டார்.

இம்ரான் கானின் சுவிட்சர்லாந்து சுற்றுப்பயணத்திற்கு நிதியுதவி அளித்த பல குழுக்கள் பாகிஸ்தானில் கொள்ளை மற்றும் பல வித சட்டவிரோத செயல்களை நடத்துகின்றன என்று அவர் குற்றம் சாட்டினார். கானின் சுற்றுப்பயணத்திற்கான செலவுகளை கானின் நண்பர்கள் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால், இந்த நண்பர்கள் பல்வேறு வழிகளில் பணத்தை மீட்டதாகவும் அவர் கூறினார்.

ALSO READ: பாகிஸ்தானில் கொடூரம்! மகள்களையும் பேரன்களையும் படுகொலை செய்த தந்தை 

நாட்டில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடத்தப்பட வேண்டிய தேர்தலை அந்த வழியிலேயே நடத்துவதுதான் பணவீக்கத்தை சமாளிக்க ஒரே வழி என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கராச்சியில் வசிக்கும் முகமது தாரேக் என்பவர், முதலில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்தான் த்னாது வாழ்க்கையை கடினமாக்கியது என்றும், தற்போது அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ஏறக்குறைய தினசரி அதிகரித்து வருவதால், அது கொரோனாவை விட கொடூரமாக இருப்பதாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.

பணவீக்கத்தை (Inflation) கட்டுப்படுத்த அரசு தவறினால், ஆளும் அரசியல்வாதிகள் மக்களின் வாக்குகளை பெறுவது கடினம் என்றும் அவர் கூறினார்.

கராச்சியில் வசிக்கும் முகமது சையத், கடந்த மூன்று வருடங்களாக இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ அரசாங்கமானது, தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் கீழ் தத்தளித்து வரும் சாதாரண மக்களுக்கு எந்த உதவியும் அளிக்கவில்லை என்று கருத்து தெரிவித்தார்.

சமீப காலங்களில், பாகிஸ்தானின் (Pakistan) பல்வேறு பகுதிகளில், குறிப்பாக PoK இல் அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் அரசாங்கத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து பெரிய போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ALSO READ: ISI பெரிய சதி, இராணுவப் பகுதிகள் மற்றும் RSS தலைவர்களுக்கு குறி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.