Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • வெடித்து சிதறிய எரிவாயு
  • 12 பேர் பலியான சோகம்!

பாகிஸ்தான் நாட்டில், பயங்கர சத்தத்துடன் எரிவாயு வெடித்துச் சிதறிய விபத்தில், 12 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அண்டை நாடான பாகிஸ்தானின், கராச்சி நகரில் ஷெர் ஷா என்ற பகுதியில் உள்ள ஒரு வங்கி கட்டடத்தின் அடியில் உள்ள பாதாள சாக்கடை கால்வாயில் இருந்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் அந்த வங்கி கட்டடமே குலுங்கியது. கட்டடங்களில் இருந்த கண்ணாடிகள் உடைந்தன.

மேலும் அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜன. 14 வரை முழு ஊரடங்கு – பிரதமர் எடுக்கப் போகும் முடிவு!
கழிவுநீர் அமைப்பில் இருந்து வெடி விபத்து நிகழ்ந்தது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், கேஸ் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது மீத்தேன் வாயுவால் வெடி விபத்து ஏற்பட்டதா? என்பது குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகே தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. எரிவாயு வெடித்து 12 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *