Share on Social Media


பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு  “நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்  தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.  நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

நாய் சேகர் என்ற தலைப்பிற்கு மிகப்பெரிய சண்டை நிலவியது.  லைக்கா நிறுவனமும் ஏஜிஎஸ் நிறுவனமும் இந்த ஒரு தலைப்பிற்காக மிக நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இறுதியில் யாருக்கும் சமரசம் ஏற்படாததால் ஏஜிஎஸ் நிறுவனம் நடிகர் சதீஸை வைத்து தயாரிக்கும் படத்திற்கு நாய் சேகர் என்ற தலைப்பு வைத்து சிறிது நாட்களுக்கு முன்பு படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது.  உங்களால் லைக்கா நிறுவனம் மிகுந்த கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக தற்போது நாய் சேகரின்  ரிட்டன்ஸ் என்று தலைப்பு வைத்ததாக கூறப்படுகிறது. 

 

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும்  பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

ALSO READ தொடரும் சர்ச்சை : வெளியாகுமா டாக்டர் திரைப்படம்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *