Share on Social Mediaகர்ப்பக்காலம் முடிந்து பிரசவம் நிறைந்து வெற்றிகரமாக குழந்தையோடு இருப்பீர்கள். பெற்றோராக குழந்தையை பராமரிப்பதில் உங்களுக்கு கூடுதல் பொறுப்பு உண்டு. குழந்தை முதலாவதாக இருந்தால் உங்களுக்கு உணர்ச்சிகளும் குழந்தையின் உணர்வை புரிந்து கொள்வதும் சவாலானதாக இருக்கும். புதிய வாழ்க்கையில் இந்த சூழலில் நீங்கள் குழந்தை வளர்ப்பில் நிறைய விஷயங்களை கற்று கொள்ள வேண்டியிருக்கும்.

​முதல் வார குழந்தையின் வளர்ச்சி

குழந்தையின் முதல் வார வளர்ச்சியில் குழந்தையின் தலை சற்று நீளமாக இருக்கும். குழந்தையின் தலை பிறப்பு உறுப்பு வழியாக பயணிப்பதால் அவரது தலை சிறிது அழூத்துகிறது. இது பாதிப்பில்லை சில நாட்களில் இயற்கையான வடிவத்துக்கு தலை திரும்பக்கூடும்.

குழந்தையின் தாலி இரண்டு மென்மையான பகுதிகள் அமைந்துள்ளன. ஒன்றின் மேல் ஒன்று பாதுகாப்பாக இருக்கும் எனினும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மண்டை ஓடு வளர்ந்து நிறைவடைய தொடங்கும்.

பிறந்தவுடன் குழந்தை அழவில்லையெனில் அது ஆபத்தா? எப்போது அழ வேண்டும் ? எப்படி அழ வைப்பது?

குழந்தையின் சருமத்தில் சிறிய சிவப்பு திட்டுகள் அல்லது சொறி போன்ற சருமம் இருக்கலாம். இது தீவிர உணர்திறன் காரணத்தால் உண்டாகியிருக்கலாம். எனினும் விரைவில் இது சரி செய்ய கூடும். இந்த நேரத்தில் குழந்தையின் தோலில் சருமம் உரிக்கப்படும்.

பிரசவத்தின் தொப்புள் கொடியை துண்டித்துவிட்டு மருத்துவர்கள் ஒரு முடிச்சு போட்டிருப்பார்கள். ஓரிரு வாரங்களில் அது காய்ந்து விழும். இந்த இடத்தை சுற்றி மென்மையாக தொற்றில்லாமல் வைத்திருக்க வேண்டும்.

சில நேரங்களில் குழந்தையின் பிறப்புறுப்புகள் வீங்கி, வீக்கமடைந்திருக்கலாம். எனினும் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை. தாயின் ஹார்மோன்கள் குழந்தையுடன் இருப்பதன் விளைவால் கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த காலகட்டத்தில் குழந்தைகள் ஒழுங்கற்ற முறையில் சுவாசிக்க செய்யலாம். சில குறுகிய சுவாசங்கள் அல்லது நீண்ட சுவாசங்கள் மற்றும் சிறிய காலங்கள் அவர்கள் சுவாசிப்பதில் உங்களுக்கு சந்தேகத்தை உண்டாக்கலாம். சில ர் சில ஒலிகளை எழுப்பலாம். இது 4 முதல் 6 வாரங்களில் இயல்பாகிவிடும்.

​குழந்தைக்கு செய்யப்படும் பரிசோதனைகள்

samayam tamil Tamil News Spot

குழந்தை பிறந்த உடன் செய்யப்படும் முக்கிய சோதனைகளில் ஒன்று APGAR (Appearance, Pulse, Grimace, Activity, and Respiration) குழந்தையின் தோற்றம், துடிப்பு, முகம், சுறுசுறுப்பு, செயல்பாடு மற்றும் சுவாசம் ஆகியவற்றின் முதலெழுத்துகளின் சுருக்கம் ஆகும். குழந்தை பிறந்த உடன் இந்த 5 விஷயங்களும் சரி செய்யப்படுகின்றன.

குழந்தையின் சரும நிறம் சரியாக இருக்கிறதா, இதயத்துடிப்பு சீராக இருக்கிறதா, குழந்தையி அனிச்சை செயல்கள் மற்றும் தசை நார்கள் நன்றாக உள்ளதா, சாதாரண சூழலில் சுவாசம் சீராக உள்ளதா என அனைத்தும் கவனிக்கப்படுகிறது.

குழந்தை கருப்பைக்குள் இருப்பது போன்று சுருண்டு கிடப்பார்கள். கைகளில் அனைத்து எடுக்கும் போது இருப்பை உணர்வார்கள். இவர்கள் நாள் ஒன்றுக்கு 15 முதல் 19 மணி நேரம் வரை தூக்கம் பெறுவார்கள். எனினும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை குழந்தை சாப்பிடவும் தூங்கவும் மலம் கழிக்கவும் விரும்புவார்கள். மலம் அடர்த்தியாகவும் பச்சை நிறமாகவும் இருக்கும். குழந்தையின் குடலில் மெகோனியம் என்னும் பொருளே இதற்கு காரணம். காலப்போக்கில் மலம் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

குழந்தையின் உள்ளங்கையில் விரல் வைத்தாலும் பிடிக்கமாட்டார்கள். கன்னங்கள் உதடுகளை தொட்டால் வாய் உறிஞ்சும் அசைவுகள் செய்வார். இது அனிச்சை செயல் ஆகும்.

​தாய்ப்பால் அல்லது பாலூட்டுதல்

samayam tamil Tamil News Spot

பிறந்த குழந்தை முதல் வாரம் தாய்ப்பால் அல்லது பாட்டில் பால் என்பதை பொறுத்து மாறுபடும்.

குழந்தை பசியுடன் இருப்பார். அனிச்சையாக தாய்ப்பால் உறிஞ்ச தொடங்குவார். மார்பகத்தை சுற்றி பார்த்து முலைக்காம்பை கண்டறிந்து பால் குடிப்பார்கள் என்றாலும் இந்த வாரத்தில் இது அவர்களுக்கு எளிதாக இருக்காது. தாய்ப்பால் உற்பத்தியில் சிக்கல் எதிர்கொண்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

ஃபார்முலா பால் என்றால் மருத்துவர் அறிவுரைப்படி அளவு துல்லியமாக இருக்க வேண்டும். இதை தீர்மானிக்க குழந்தையின் வயது மற்றும் எடை முக்கிய காரணமாக இருக்கும்.

​குழந்தையின் தூக்கம்

samayam tamil Tamil News Spot

1 வார குழந்தையின் தூக்கம் மிக அதிகமாக இருக்கும். பிரசவத்தின் முழு செயல்முறையும் குழந்தைக்கு தூக்கத்தை உண்டாக்கும்.

முதலில் குழந்தை உடலை மல்லாந்த நிலையில் தூங்க வேண்டும். அது பாதுகாப்பாகவும் வசதியாகவும் இருக்கும். அறை வெப்பநிலை பொருத்தமானதாக இருக்க வேண்டும். புகை அல்லது மாசுபடுத்திகள் அறைக்குள் தவிர்க்க வேண்டும். சமயங்களில் தாய்ப்பால் குடித்து கொண்டே குழந்தை தூங்க கூடும். இது அவர்களது ஆற்றலை சோர்வடைய செய்து தூக்கத்தை உண்டாக்கும்.

​குழந்தையின் பழக்கவழக்கம்

samayam tamil Tamil News Spot

பிறந்த குழந்தை முதல் ஒரு வாரம் அமைதியாக இருப்பார்கள். வெகு அரிதாக உணவுக்காகவும், இயற்கை உபாதைக்கு பிறகும் இலேசாக அசையவோ, அழவோ செய்வார்கள். மீதமுள்ள அனைத்து நேரங்களும் தூங்கி கொண்டு தான் இருப்பார்கள். அதே நேரம் பிறந்த இந்த ஒரு வாரம் அவர்கள் தூங்குவது அரிதாக இருக்கும். பெரும்பாலும் விழித்து இருப்பார்கள். குரல்களை உற்று கேட்பது போன்ற பாவனைகளை பார்க்கலாம்.

தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் குளிர்காலத்தில் ப்ரக்கோலி, காலிஃப்ளவர் சாப்பிடகூடாது வேறு என்ன சாப்பிடணும்?

குழந்தைக்கு போதுமான உணவு அளித்தால் அவர்கள் திருப்தியாக இருப்பார்கள். சுற்றிலும் உறவினர்கள், சத்தம், குழந்தையை தூங்கவிடாமல் செய்வது என எல்லாமே குழந்தைக்கு அசெளகரியத்தை உண்டாக்கலாம். இதனால் குழந்தை அழுவார்கள் மேலும் சோர்வடையவும் செய்வார்கள்.

இந்த வாரத்தில் குழந்தை கருவிலிருந்து வெளியே வந்து வெப்பநிலையை ஏற்றுகொள்வதே சிரமமாக இருக்கும் என்பதால் குழந்தைக்கும் பிரசவகால உழைப்பிலிருந்து தாய்க்கும் ஓய்வு மட்டுமே தேவை.Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *