Share on Social Media

அமர்ந்தே இருக்கும் இந்த வாழ்க்கை முறையும் உணவு பழக்கமும் மனிதர்களிடையே உடல் பருமன் அதிகமாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளன. உலகம் முழுவதும் சர்க்கரை நோய் எப்படி பரவல் அடைந்துள்ளதோ அதே போல பல மனிதர்களுக்கு பெரும் பிரச்சனையாக உடல் பருமன் உள்ளது. உடல் பருமன் ஒரு ஆரோக்கிய பிரச்சனையாகும்.

​எடை அதிகரிப்பு

கொரோனா காலத்தில் பொது முடக்கம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். பொது முடக்கம் காலத்தில் உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டன. மேலும் வீட்டில் இருந்தே பணி செய்யும்படி இருந்ததால் பலரால் தங்கள் உடல் எடையை நிர்வகிக்க முடியவில்லை. இதனால் பொது முடக்க காலத்தில் பலருக்கு உடல் எடை அதிகரித்தது. எனவே நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கும் உதவும் சில எடை இழப்பு குறிப்புகளை இப்போது பார்ப்போம்.

​எடை இழப்பு

samayam tamil Tamil News Spot

உடல் எடை குறைப்பு குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது எடை இழப்பிற்கு எந்த ஒரு சிகிச்சை முறையை மேற்கொண்டாலும் அவற்றின் அடித்தளமாக வாழ்க்கை முறையில் நாம் செய்யும் மாற்றங்களே உள்ளன. அவை ஆரோக்கியமான 4 வாழ்க்கை முறை மாற்றங்களையே அடிப்படையாக கொண்டுள்ளது.

ஆரோக்கியமான உணவு

உடல் செயல்பாடு

மன அழுத்தம் மற்றும் மேலாண்மை

நல்ல தூக்கம்

பலருக்கு உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட பிரச்சனையாக உள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கபடாவிட்டால் உடல் பருமன் மிக பெரும் ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

​உடல் பருமனால் உண்டாகும் நோய்கள்

samayam tamil Tamil News Spot

டைப் 2 நீரிழிவு நோய், அதிக கொழுப்பு, பக்கவாதம், இதய பிரச்சனைகள், ஸ்லீப் அப்னியா, உயர் ரத்த அழுத்தம், பாலிசிஸ்டிக் கருப்பை நோய், சில வகை புற்றுநோய்கள், கல்லீரல் கொழுப்பு, மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகள் இவை யாவும் உடல் எடை அதிகரிப்பால் உடலில் உண்டாகும் நோய்களாக உள்ளன.

நாம் உடல் எடையை கண்காணிப்பது முக்கியமாகும். அதற்கு நமக்கு உடல் நிறை குறியீடு (பி.எம்.ஐ) உதவுகிறது. குணப்படுத்தப்படுவதை விடவும் வருமுன் காப்பதே சிறந்தது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம் உடல் பருமன் ஏற்படாமல் தடுக்க முடியும். பொதுவாக உடல் எடை உணவால் ஏற்படுகிறது என மக்கள் நினைத்தாலும் இதற்கு உணவு மட்டும் காரணமாக இருப்பதில்லை. உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறையில் செய்ய வேண்டிய மாற்றங்களை இப்போது பார்ப்போம்.

​முழு மனதுடன் சாப்பிடுதல்

samayam tamil Tamil News Spot

உணவு உண்பதை பொறுத்தவரை அதில் பல விதிமுறைகளை பின்பற்றி ஆக வேண்டும். எதை நாம் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும்? மேலும் முக்கியமான கேள்வி அதை எப்போது சாப்பிட வேண்டும்?

குறைந்த கலோரிகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து கொண்ட அடர்த்தியான உணவுகளை தேர்வு செய்யலாம். சுட்டு உண்ணுதல், அவித்தல் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளை கொண்டு சமைக்கலாம். பதப்படுத்தப்பட்ட மற்றும் வறுத்த உணவுகளை தவிர்க்கவும். மேலும் நீங்கள் உண்ண வேண்டிய வேளைகளில் உணவை தவிர்க்கவோ தாமதப்படுத்தவோ வேண்டாம். இரவு குறைந்தது உறங்க செல்வதற்கு 3 முதல் 4 மணி நேரம் முன்பே இரவு உணவை உண்பதற்கு பழகி கொள்ளவும்.

​உடல் ரீதியாக சுறு சுறுப்பாக இருங்கள்

samayam tamil Tamil News Spot

வாரத்தில் குறைந்தது 5 நாட்களாவது 30 முதல் 45 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், படிக்கட்டுகளில் ஏறுதல், நடைபயிற்சி, ஓடுதல், யோகா போன்ற எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுங்கள். நீங்கள் ஒரு உடற்பயிற்சியை கஷ்டப்படாமல் மகிழ்ச்சியுடன் செய்தால் மட்டுமே அதை எப்போதும் செய்ய முடியும்.

​மன அழுத்தத்தை நிர்வகிக்க வேண்டும்

samayam tamil Tamil News Spot

தினமும் உங்கள் பொழுதுப்போக்கிற்காக சிறிது நேரத்தை ஒதுக்கவும். மேலும் சுவாச பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மன அழுத்தத்தை குறைக்க உங்களுக்கு எது உதவுகிறதோ அதை செய்வதற்கான நேரத்தை ஒதுக்குங்கள். சிலருக்கு பாடல் கேட்பது மிகவும் பிடிக்கலாம். சிலருக்கு விளையாடுவது பிடிக்கலாம். நமக்கு பிடித்த பொழுது போக்கு விஷயங்களை மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

​நல்ல தூக்கம்

samayam tamil Tamil News Spot

நல்ல தூக்கம் என்பது அனைத்து உயிரினங்களுக்கும் இன்றியமையாதது ஆகும். குறைந்தது ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்க வேண்டும். இரவுகளில் தாமதமாக உறங்குவதை தவிர்க்கவும். மேலும் தினசரி தூங்குவதற்கான சரியான நேரத்தை பின்பற்றவும்.

​நீரேற்றமாக இருத்தல்

samayam tamil Tamil News Spot

நமது உடலானது அதிகமான அளவில் நீரை கொண்டுள்ளது. எனவே தினசரி நமக்கு தேவையான அளவிலான தண்ணீரை எடுத்துக்கொள்வது மிக முக்கியமாகும். அதற்காக க்ரீன் டீ, எலுமிச்சை சாறு, மோர், சூப் போன்ற சுவையான பானங்களை கூட எடுத்துக் கொள்ளலாம். இதனால் உடலுக்கு ஊட்டசத்துக்களும் கிடைக்கின்றன.

நாம் இந்த வாழ்க்கையை ஒரு முறை மட்டுமே வாழ முடியும் எனவே அந்த வாழ்க்கையை ஆரோக்கியத்துடனும் நிம்மதியுடனும் வாழ முயற்சி செய்வோம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *