Share on Social Media

நிம்மதியான ஓய்வுக் கால பலன்கள் வழங்குவதில் என்.பி.எஸ் (நேஷனல் பென்ஷன் திட்டம்) பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் முக்கிய திட்டமாக விளங்குகிறது. இந்த திட்டத்தின் முக்கிய மைல் கல்லாக இந்தத் திட்டம் நிர்வகிக்கும் மொத்த சொத்து மதிப்பு ரூ.6.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 7 மாதத்தில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இந்தத் திட்டத்தின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது. அதற்கு ஒரு காரணமாக, பங்குச் சந்தையின் உயர்வைக் குறிப்பிடலாம்.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தத் திட்டத்தின் மூலம் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு உயர்ந்தது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் மேலும் ரூ. 5 லட்சம் கோடி சொத்தை நிர்வகிக்கும் மிகப் பெரிய திட்டமாகக் குறுகிய காலத்தில் என்.பி.எஸ் வளர்ந்துள்ளது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கடந்த 7 மாதத்தில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு உயர்ந்தது.

Investment

Investment
Image by Steve Buissinne from Pixabay

மேலும் இந்தத் திட்டத்தின் பல்வேறு புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்:

1. மொத்த முதலீட்டு தொகையில் என்.பி.எஸ் ரூ. 5.87 லட்சம் கோடியும் மற்றொரு பென்ஷன் திட்டமான அடல் பென்ஷன் திட்டத்தில் ரூ.16,570 கோடியும் நிர்வகிக்கப்படுகிறது.

2. 4.28 கோடி மக்கள் பல்வேறு அரசு மற்றும் தனியார் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். இதில் 1.45 லட்சம் வாடிக்கையாளர்கள் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர். பென்ஷன் திட்டம் விரும்பும் மூன்றில் ஒருவரின் விருப்பமாக என்பிஎஸ்இருக்கிறது என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

3. இதில் அதிகமாக பல்வேறு மாநிலங்களில் பணிபுரியும் 52.28 லட்சம் அரசு ஊழியர்களும் 2.18 கோடி மத்திய அரசின் ஊழியர்களும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துள்ளனர்.

4. என்.பி.எஸ் திட்டத்தில் நிர்வகிக்கப்படும் ரூ. 6 லட்சம் கோடியில் 85% மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களால் மேற்கொள்ளபட்டுள்ளது.

5. தனியார் ஊழியர்கள் மற்றும் இதர பொது மக்கள் இந்தத் திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பில் 15% முதலீடு செய்துள்ளனர்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *