ஹைலைட்ஸ்:
- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் நினைவு தினம் அனுசரிப்பு
- 11 நாட்களுக்கு சிரிக்க, மது அருந்த, மளிகை கடைக்கு செல்ல தடை
- துக்கத்தை முறையாக அனுசரிப்பதை கண்காணிக்க உத்தரவு
இதையொட்டி இன்று முதல் அடுத்த 11 நாட்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுக்கு நாடு முழுவதும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, சிரிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினம் மளிகை கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வேகமாகப் பரவப் போகிறது ஓமைக்ரான்.. ஊசி போடுங்க.. அப்பத்தான் தப்பலாம்.. பைடன் எச்சரிக்கை
இத்தகைய கட்டுப்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். அரசின் உத்தரவை மீறி செயல்பட்டால் அவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கிம் ஜாங் இல்லின் துக்க நிகழ்வு சரியாக அனுசரிக்கப்படுகிறதா? மக்கள் வருத்தப்படுகிறார்களா?
என்பதை கண்காணிக்க காவல்துறை அதிகாரிகளுக்கு தனியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டின் தொடக்கத்தில் தன்னை போல யாரும் சிகை அலங்காரம் செய்து கொள்ளக் கூடாது. மெலிதான ஜீன்ஸ் அணியக் கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அதிபர் கிம் ஜாங் உன் விதித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கும் ஆளாகியது.
ஒமைக்ரான் செய்யப்போகும் சம்பவம்.. ஜனவரியில் விஷயம் இருக்கு!
இந்த சூழலில் 11 நாட்கள் கட்டுப்பாடுகள் அடுத்த சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. வடகொரியா நாட்டில் பொருளாதார நெருக்கடியால் பொதுமக்கள் பெரிதும் தவித்து வருவதாக கூறப்படுகிறது. பசி, பட்டினி, வறுமையால் வாடி வரும் சூழலில் அதிபர் கிம் ஜாங் உன்னின் கட்டுப்பாடுகள் மேலும் துயரத்தில் ஆழ்த்துவதாக பொதுமக்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.