Share on Social Media


விருதுநகர் :  பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல்வேறு சேதங்களை இந்த கனமழை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டின் பல இடங்களில் பரவலாக மழை கொட்டி தீர்த்து திக்குமுக்காட செய்தது.  பல சாலைகளும், குடியிருப்புகளும் மழைநீரின் வெள்ளத்தால் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான இடத்தில்  வசித்த மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அதிகாரிகள் இடம்பெயர செய்தனர். 

ALSO READ மயங்கிக் கிடந்த ஒருவரை பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மீட்டார்

பல பயிர்களும் மழைநீரில் மூழ்கியது, பல இடங்களில் சாலைகலே தெரியாத அளவிற்கு மழைநீர்  சூழ்ந்திருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதித்தது. கொரோனா பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, தற்போது கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியதையடுத்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளி செல்ல தொடங்கினர்.  இந்நிலையில் இந்த திடீர் கனமழை வெள்ளத்தால் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு, அதாவது  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், கடலூர், நாமக்கல், சேலம், விழுப்புரம், திண்டுக்கல், விருதுநகர், பெரம்பலூர், மதுரை,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுக்கோட்டை போன்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

இதனால் மாணவர்கள் மீண்டும் மழை விடுமுறையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.  அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் ட்விட்டரில் , “நாளை விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும்மா? ” என்று கேள்வி கேட்டதோடு அதில் விருதுநகர் மாவட்ட கலெக்டர்மேகநாத ரெட்டியையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியையும் டேக் செய்திருந்தான். 

 

இதனை கண்ட கலெக்டர் இதற்கு பதிலளிக்கும் விதமாக,”இனிமேல் விடுமுறை கிடையாது, சூரியன் வெளியே வந்துவிட்டது, அதனால் படி-விளையாடு-மகிழ்ச்சியாய் இரு, இதையே வழக்கமாக்கிக்கொள் என்று பதிலுரைத்தார். மேலும் இதற்கு பதிலுரைத்த மாணவன் ,”ஸ்ரீ வில்லிபுத்தூரில் மழை பெய்கிறது, அதனால் தான் கேட்டேன் ” என்றான்.  மீண்டும் அதற்கு பதிலளித்த கலெக்டர் மேகநாத ரெட்டி , நாளைக்கு மழை இருக்காது , இப்பொழுதே நேரமாகி விட்டது , சீக்கிரம் போயி தூங்கு, காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும், குட் நைட்” என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.  மேலும்,  கலெக்டரின் இந்த செயலை மாணிக்கம் தாகூர் எம்பி வெகுவாக பாராட்டியுள்ளார். 

ALSO READ சென்னையில் எப்போது நிற்கும் மழை? வானிலை ஆய்வு மையம் தகவல்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *