Share on Social Media


தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, முதன்முறையாக தனித்துவமான அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கால் பதித்துள்ளார். உலகின் மிகப்பெரிய லிப் பாம் கலெக்ஷன் கம்பெனியான – தி லிப் பாம் கம்பெனி எனும் நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய பயணத்தை அவர் துவக்கியுள்ளார்.

நடிகை நயன்தாரா (Nayanthara) முன்னணி தோல் மருத்துவர் டாக்டர் ரெனிட்டா ராஜன் உடன் இணைந்து, காஸ்மெடிக்ஸ் வர்த்தக உலகில், ஒரு புதிய பிராண்டை அறிமுகம் செய்து, ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கியுள்ளார். லிப் பாம்கள் மட்டுமே வழங்கவுள்ள இந்நிறுவனம், நூற்றுக்கணக்கான வகைகளில் அதனை வழங்கி சிறப்பிக்கவுள்ளது. 

உலகிலேயே மிகப்பெரிய லிப் பாம் அணிவகுப்பை வழங்கும் நிறுவனமாக இந்நிறுவனம் செயல்படவுள்ளது. நடிகை நயன்தாரா தான் பயன்படுத்தும் சொந்த சரும பராமரிப்பு பொருட்களில், மிகச்சிறப்பான செயல்திறன், உயர் பாதுகாப்பு அம்சங்களையே மிக முக்கிய அம்சமாக கருதுவதாகவும், அந்த இரு அம்சங்களும் இந்த தி லிப் பாம் கம்பெனிTM பொருட்களில் கண்டிப்பாக இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் ரெனிட்டா ராஜன் கூறுகையில், ‘முதலில் நாங்கள் மிகவும் மென்மையான உதடுகளை பாதுகாக்கும் ஒரு சிறந்த உதட்டு தைலத்தை உருவாக்கவே திட்டமிட்டோம். அது படிப்படியாக வளர்ந்து, ஒரு தனிச்சிறப்பான தயாரிப்பாக மாறிவிட்டது. எங்களது உதட்டு தைலம், லிப் பாம், உதடுகளை எடுப்பாக உயர்த்தவும், மென்மையாக்கவும், பளபளப்பாகவும், பொலிவாகவும் மாற்றுவது மட்டுமன்றி, இதில் உள்ள நியூரோ காஸ்மெட்டிக்ஸ் பொருட்கள் உதடுகளுக்கு ஆரோக்கிய உணர்வைத் தருவதோடு, மூளையின் இராசயங்களோடு தொடர்புகொண்டு, மனதில் ஒரு சாந்தமான நிலையை ஏற்படுத்துகிறது’ என்றார்.

ALSO READ | சூப்பர் ஸ்டார் ஏரியாவில் புது வீடு வாங்கிய லேடி சூப்பர் ஸ்டார் – ஒன்றல்ல, இரண்டு ப்ளாட் 

தனது சொந்த பயன்பாட்டுக்கு, வழக்கத்திற்கு மாறான ஒரு அழகு சாதன பொருளைத் தேடிக்கொண்டிருந்த நயன்தாரா, டாக்டர் ரெனிட்டா ராஜனிடமிருந்து TLBC லிப் பாமை பெற்ற உடனேயே, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் தயாரிப்பு களத்தில் கால்பதிக்க முடிவு செய்து விட்டார். தனது தோல் பராமரிப்பு முதலான சொந்த பயன்பாட்டுக்கு உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களில், சமரசம் செய்யாத நிலைப்பாட்டை நம்பும் நயன்தாரா, தி லிப் பாம் கம்பெனி TM பொருட்களிலும் அதனை செய்லபடுத்துவதில் வெகு கவனமாக செயல்படுவார்.

மிகச்சிறப்பான வகையில் உயர்தொழில்நுட்ப திறனுடன், இந்த லிப் பாம்கள் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு லிப் பாமும் தனித்துவமான மாறுபட்ட இயற்கை பொருட்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. உதட்டுப்பிளவை சரிசெய்யவும், பளபளக்க செய்யவும் ஏதுவான வகையில் இப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. 

கடல்சார் பொருட்கள் கொண்டும், சைவ தாவர எண்ணெய்கள் கொண்டும், மறுசுழற்சி மரவகைகள் கொண்டும் இவை தயாரிக்கப்படுகின்றன. எந்த வகை செயற்கை பூச்சும் இல்லாமல், விரைவில் கெடாத வண்ணம், முழுக்க இயற்கை பொருட்கள் மட்டுமே கொண்டு TLBC-ன் லிப் பாம்கள் தயாரிக்கப்படுகின்றன. 

ஒரு சிறப்பான உயர்தர அழகு சாதன பொருளை தேடுபவருக்கு, சிறப்பான படைப்பை வழங்குவதில் பெருமை கொள்கிறோம் என்கிறார் நயன்தாரா. உதடு தைலம் பயன்படுத்துவது ஆரோக்கியமான பழக்கமாகும். மேலும் எங்களது உதடு தைலம் ஒரு இனிமையான உணர்வை தந்து, இதனை அத்தியாவசிய தினசரி பழக்கமாக மாற்றும் என்கிறார் டாக்டர் ரெனிட்டா ராஜன். 

இறுதியாக இருவரும் தி லிப் பாம் கம்பெனி TM மூலம் சிறப்பான பொருட்களை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். இப்பொருட்கள் உங்களுக்கு சிறப்பான சரும பொலிவை தரும் என்றனர். இந்த லிப் பாம்கள் பற்றிய பிற தகவலை https://thelipbalmco.in/என்ற இந்த வலைத்தளத்தில் பெறலாம். 

ALSO READ | இந்த மாதம் திரையரங்கில் வெளியாகும் முக்கிய படங்கள்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.