Share on Social Media

இது கர்ப்பிணி பெண்கள், படுக்கையில் கிடக்கும் நோயாளிகள், முதுகெலும்பு காயங்களை கொண்டிருப்பவர்களை அதிகமாகவே பாதிக்கிறது. இந்த மோசமான மூல நோய்க்கு ஆரம்ப கட்டத்தில் கவனித்தால் இந்த வீட்டு வைத்திய சிகிச்சை பயனுள்ளதாக இருக்கும்.

மூலம்

மூலநோய் என்பது நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. உட்புற மூலம் ஆகும். இது குத கால்வாய் பகுதியின் ஆழத்தில் உண்டாவதால் இதை பார்க்க முடியாது. பெரும்பாலும் இவை தானாகவே மறைந்துவிடக்கூடும். இது மலம் கழிக்கும் போது எரிச்சலை உண்டாக்கலாம். இரட்தக்கசிவு ஏற்படலாம். வலி அசெளகரியம் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

இரண்டாவது நீடித்த மூல நோய். இது மலவாய் பகுதியில் வீக்கம் மற்றும் மலவாய் ஒட்டிக்கொள்ளுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாக்கலாம். மலவாய் ஒட்டிக்கொள்ளுதலுக்கேற்ப மருத்துவர் மூல நோய் தீவிரத்தை முடிவு செய்வார்.

இருமலுக்கு உதவும் எளிமையான வீட்டு வைத்தியம்! பலன் நிச்சயம் உண்டு!

மூன்றாவது உடலில் இருந்து மலம் வெளியேறும் இடமான மலவாய் பகுதியில் உண்டாகும் மூலம். இது வெளி மூலம் என்றழைக்கப்படுகிறது. சில நேரங்களில் மலவாய் பகுதியில் கட்டிகள் உண்டாகலாம். இது உட்காரும் போது உடல் செயல்பாடுகள் அதிகரிக்கு போது அசெளகரியத்தை உண்டாக்கலாம்.

த்ரோம்போஸ்ட் மூல நோய் என்பது உடல் திசுவில் இரத்த கட்டை கொண்டிருக்கும். அதீத வலி, வீக்கம், மூலம் ஏற்பட்ட இடத்தை சுற்றி இரத்தம் கட்டிய நிறம் என்று இருக்கும். இந்த மூலநோய்க்கு உதவும் விட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

​வெதுவெதுப்பான பாத்டப் குளியல்

samayam tamil Tamil News Spot

மூல நோய்க்கு பாத் டப் குளியல் நன்றாகவே பலனளிக்கும். குளியல் தொட்டியில் மிதமான சூடு கொண்ட நீரை நிரப்பி விடுங்கள்.

குளியல் தொட்டியில் பிறப்புறுப்புக்கள் வெதுவெதுப்பான நீரில் படும் படி 10 நிமிடங்கள் வைத்திருங்கள். இந்த குளியல் தொட்டியில் குளியல் சோப், லிக்விட் எதையும் சேர்க்க வேண்டாம். குளித்து முடித்த பிறகு பிறப்புறுப்பு பகுதிகளை மெதுவாக மெல்லிய துணியில் ஒற்றி எடுக்கவும்.

தினமும் மூன்று அல்லது இரண்டு முறையாவது குளிக்க வேண்டும். தொடர்ந்து குளித்து வந்தல் பலன்கள் விரைவாக பெறலாம். வெதுவெதுப்பான நீர் குத தசைகளுக்கு ஓய்வு தந்து இதமாக வைத்திருக்கிறது இதனால் அரிப்பு தன்மையும் குறைகிறது.

டீ ட்ரீ ஆயில்

samayam tamil Tamil News Spot

மூல நோய் சரி செய்ய உதவும் வீட்டு வைத்தியத்தில் எளிமையான முறை இது என்று சொல்லலாம். டீ ட்ரீ ஆயில் என்னும் தேயிலை எண்ணெய் 3 துளிகள் எடுத்து , 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பருத்தியை நனைத்து மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் அந்த பஞ்சை கொண்டு துடைக்க வேண்டும்.

தினமும் மூன்று முறை இதை செய்ய வேண்டும். தொடர்ச்சியாக செய்து வந்தல் பலன்களை விரைவாக பெறலாம். டீ ட்ரீ ஆயில் என்பது சருமத்தில் உண்டாகும் அரிப்பு மற்றும் அழற்சியை போக்கும் அற்புதமான மருந்து. இது ஆன் டி மைரோபியல் பண்புகளை கொண்டிருப்பதால் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தை சுத்தமாகவும் கிருமிகள் அற்றதாகவும் வைத்திருக்க செய்யும்.

​கற்றாழை

samayam tamil Tamil News Spot

கற்றாழை மூல நோயை தடுக்க உதவக்கூடிய பொருள். கற்றாழையை இரண்டாக நீள்வாக்கில் வெட்டி தண்ணீரில் ஊறவிடவும். கற்றாழையில் இருக்கும் மஞ்சள் நிற திரவம் முழுவதும் வெளியேறி விடும். பிறகு இதன் உள்ளே இருக்கும் வெள்ளை போன்ற ஜெல்லை எடுத்து ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து பிறகு மலவாய் பகுதியில் தடவி வர வேண்டும்.

இந்த கற்றாழையை சாறு எடுத்தும் குடித்து வரலாம். கற்றாழை மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்தும் சரி செய்ய உதவும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை கற்றாழை ஜெல் தடவி வந்தால் பலன் கிடைக்கும்.

கற்றாழை அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூல நோயில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. மூல நோய் வீக்கத்தால் உண்டாகும் வலியை குறைக்க கற்றாழை உதவக்கூடும்.

தேங்காயெண்ணெய்

samayam tamil Tamil News Spot

சுத்தமான தேங்காயெண்ணெய் எளிமையானது . அதிக செலவில்லாதது. சுத்தமான எண்ணெயா என்பதை மட்டும் கவனியுங்கள். கைகளை நன்றாக சுத்தமாக கழுவி தேங்காயெண்ணெயை விரல்களால் நனைத்து முல நோய் பாதிப்பு உண்டான இடத்தில் தடவி விட வேண்டும். குறிப்பாக மூலத்தால் கட்டிகள் உண்டான இடத்தில் தடவி எடுக்கவும்.

கீழே உட்கார்ந்து சாப்பிட்டா ஆயுள் அதிகரிக்குமாம், வேறு நன்மைகளும் தெரிஞ்சுக்கங்க!

குத பகுதியில் வலி அல்லது கட்டிகள் போகும் வரை நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை மூலக்கட்டிகள் ஏற்பட்ட இடத்தில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதை தடவி வந்தால் பலனை விரைவில் பார்க்கலாம்.

தேங்காயெண்ணெய் பயன்படுத்தும் போது மூல நோயால் உண்டாகும் எரிச்சல் மற்றும் அரிப்புத்தன்மையில் இருந்து நிவாரணம் பெற உதவும்.

​பூண்டு

samayam tamil Tamil News Spot

பூண்டு காரத்தன்மை கொண்டது. இது மூலத்துக்கு சிகிச்சை அளிக்க உதவும். பூண்டு பற்கள், மென்மையான துணி, வெதுவெதுப்பான நீர். பூண்டின் தோலை உரித்து அதை நீரில் போட்டு கொதிக்க விடவும். கொதிக்க வைத்த நீரை வடிகட்டி ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து அதில் காட்டன் துனியை நனைத்து சில நிமிடங்கள் வைத்து பிறகு அந்த துணியை ஆசன வாய் பகுதியில் 10 நிமிடங்கள் வரை ஒற்றி எடுக்க வேண்டும்.

இப்படி ஒரு மணி நேரம் வரை ஒத்தடம் கொடுத்து வந்தால் ஆசன வாய் கடுப்பு நீங்கும். தினமும் இரண்டு முறை இதை செய்து வரலாம். பூண்டில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன் டி பையாட்டிக் பண்புகள் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து வேகமாக நிவாரணம் அளிக்க செய்கிறது.

​கருஞ்சீரக எண்ணெய் / வினிகர்

samayam tamil Tamil News Spot

கருஞ்சீரக எண்ணெய் 1 டீஸ்பூன் எடுத்து சம அளவு வினிகர் கலந்து 1 டீஸ்பூன். கருஞ்சீரக விதை எண்ணெய் உடன் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து விடவும். இதை மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் கைகளை சுத்தமாக கழுவி பிறகு பயன்படுத்த வேண்டும். தினமும் இரண்டு அல்லது மூன்று முறையாவது இதை தடவி எடுக்க வேண்டும். இதை உள்ளுக்கும் எடுக்கலாம்.

கருஞ்சீரக விதை எண்ணெய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளவை. ஆண்டி ஆக்ஸிடண்ட், அனால்ஜெசிக், நோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளவை. இது செரிமான இயக்கத்தை மேம்படுத்தும் என்பதால் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.

​நார்ச்சத்துள்ள உணவுகள்

samayam tamil Tamil News Spot

மூல நோயை தடுக்க நார்ச்சத்து மிக்க உணவுகள் உதவக்கூடும். உணவே மருந்து முறையில் மூல நோயை தடுக்கலாம்.

உடல் உஷ்ணத்தால் பேதியா, இந்த கைவைத்தியம் செய்து பாருங்க!

நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மலச்சிக்கல் இல்லாமல் தவிர்க்க உதவும். மலம் கழிப்பதில் முல நோய் இருப்பவர்கள் அதிகமான சிரமத்தை கொண்டிருக்கலாம். உணவு முறையில் போதுமான அளவு நார்ச்சத்து இருந்தால் மலம் கழிப்பது இலகுவாக இருக்கும்.

தினசரி உணவில் 30 முதல் 35 கிராம் நார்ச்சத்து எடுத்துகொள்வதன் மூலம் மூல நோயை குணப்படுத்தலாம். காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள் போன்றவை மூலத்தை தீவிரமாகாமல் தடுக்க செய்யும்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *