Share on Social Media

நீண்ட நேரம் தூங்குவது. தவறான நிலையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது, கழுத்து முதுகெலும்பை பாதிக்க செய்கிறது. இது அறிகுறிகளை மோசமாக்கும். வலியை தணிக்க உதவும் இயற்கை மருத்துவங்கள் உள்ளன. என்ன மாதிரியான வைத்தியங்கள் என்பதை பார்க்கலாம்.

​சர்விகல் ஸ்பாண்டிலோசஸ்

வயது தொடர்பான நிலை. கழுத்து முதுகெலும்பை பாதிக்க செய்கிறது. இது கழுத்தில் அமைந்துள்ளது. இது கழுத்து கீல்வாதம் மற்றும் கழுத்து கீல்வாதம் என்றும் அழைக்கபப்டுகிறது. கழுத்து முதுகெலும்புகளின் மூட்டுகள் மற்றும் வட்டுகள் பாதிக்கப்படுகின்றன.

கொழுப்பு அதிகமா இருக்கா, இதை சாப்பிடுங்க, சீக்கிரம் கரையும், பக்கவிளைவும் இல்லை!

எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளின் சேதத்தால் இந்த ஸ்பாண்டிலோசஸ் உண்டாகிறது. வயதாகும் போதே இந்த பகுதிகள் இயற்கையாகவே சிதைந்து வலியை உண்டாக்குகிறது. சிலருக்கு அறிகுறிகள் இல்லை யென்றாலும் நாள்பட்ட வலியை அனுபவிக்கலாம்.

​அறிகுறிகள்

samayam tamil Tamil News Spot

சர்விகல் ஸ்பாண்டிலோசஸ் இருந்தால் அறிகுறிகள் இலேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். இது படிப்படியாக அல்லது திடீரென வரலாம்.இந்த நிலையின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று தோள்பட்டை சுற்றியுள்ள வலி, சிலர் கை மற்றும் விரல்களில் வலியை எதிர்கொள்கிறார்கள்.

நீண்ட நேரம் நின்று கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ இருப்பது. அடுக்கு தும்மல், இருமல் கழுத்தை எப்போதும் பின்னோக்கி சாய்த்து இருப்பது போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

கழுத்தின் விறைப்பு, தலைவலி தலையின் பின்புறத்தை பாதிக்க செய்யும், தோள்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு உணர்வின்மை, சில நேரங்களில் கால்களை பாதிக்க செய்யும். இதையும் அலட்சியம் செய்யும் போது இன்னும் அறிகுறிகள் தீவிரமாகலாம். இந்த கழுத்துவலிக்கு உதவும் வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.

​எப்சம் உப்பு குளியல்

samayam tamil Tamil News Spot

1 கப் எப்சம் உப்பு தண்ணீரில் கலந்துதொட்டியில் நிரப்பி உப்பு கரையும் வரை விட்டு பிறகு 30 நிமிடங்கள் வரை கழுத்துப்பகுதியை சாய்த்து ஊறவிடவும். இதை தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை செய்து வரலாம்.

எபசம் உப்பில் மெக்னீசியம் உள்ளது. இது கழுத்து முதுகெலும்பின் வலி மற்றும் வீக்கத்துக்கு உதவும் அழற்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை வெளிப்படுத்தகூடும்.

​சூடான மற்றும் குளிர்ந்த ஒத்தடங்கள்

samayam tamil Tamil News Spot

சூடான அல்லது குளிர்ந்த நீர் என இரண்டில் ஒன்றை கொண்டு கழுத்து பகுதி, கழுத்து பகுதி சுற்றி ஒத்தடம் கொடுக்கலாம். ஐஸ்கட்டி ஒத்தடமாக இருந்தால் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை வைக்கலாம். இதை 3 முதல் 4 முறை செய்யலாம். அடுத்த 48 மணி நேரம் கழித்து சூடான வெந்நீரை கொண்டு ஒத்தடம் கொடுக்கவும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை வரை செய்யலாம்.

சூடான வெந்நீர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலி மற்றும் விறைப்பை நீக்குகிறது. குளிர்ந்த ஒத்தடம் கொடுப்பது வீக்கம் மற்றும் வீக்கத்தின் அறிகுறிகளை குறைக்கிறது. இது பாதிக்கப்பட்ட பகுதியை குறைக்க செய்கிறது.

​பூண்டு

samayam tamil Tamil News Spot

பூண்டு பல் – 3 கப்

தினமும் காலை வேளையில் 3 பூண்டு பற்களை தோல் உரித்து சிறு துண்டுகளாக நறுக்கி வாயில் உமிழ்நீரோடு கலந்து மெல்லுங்கள். தினமும் இதை செய்யலாம்.

பூண்டு அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவரண பண்புகளை கொண்டுள்ளது. கழுத்து வலி மூட்டுகள் வட்டுகளின் வலி வீக்கம் மற்றும் வீக்கத்தை தணிக்க இது சிறந்த தீர்வாகும்.

மஞ்சள்

samayam tamil Tamil News Spot

மஞ்சள் -கால் டீஸ்பூன்

பால் – 1 டம்ளர்

ஒரு டம்ளர் பசும்பாலை காய்ச்சி அதில் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். தினசரி இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு இதை குடித்து வர வேண்டும்.

வயிறு மந்தமா இருக்கா, இந்த சூரணத்தை தயாரிச்சு சாப்பிடுங்க, தயாரிப்பும் பயன்பாடும்!

மஞ்சளில் உள்ள குர்குமின் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண பண்புகளை கொண்டுள்ளது. இது கழுத்து வலி அறிகுறியை வலியை குறைக்க செய்யும்.

​இஞ்சி

samayam tamil Tamil News Spot

இஞ்சி – சிறு துண்ஃபு

தண்ணீர் – 1 கப்

1 கப் தண்ணீரில் இஞ்சியை தோல் நீக்கி அரைத்து சாறு எடுத்து கலக்கவும். இதை 5 முதல் 7 நிமிடங்கள் வரை மென்மையாக கொதிக்கவிட்டு இறக்கு இளஞ்சூடாக இருக்கும் போது மெல்லிய துணியில் அதை நனைத்து கழுத்து பகுதியில் தோளபட்டையில் ஒத்தடம் கொடுக்கலாம். இதே போன்று இஞ்சி டீ போட்டு குடிக்க வேண்டும்.

இஞ்சியில் உள்ள இஞ்சரோல் என்று அழைக்கப்படும் கலவை கழுத்து வலிக்கு அறிகுறிகளை போக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை. இது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

​வேப்பிலை

samayam tamil Tamil News Spot

வேப்பிலை – கைப்பிடி அளவு

வேப்பிலையை அரைத்து பேஸ்ட் ஆக்கி அதை வாணலியில் சூடாக்கவும். இதை கழுத்தில் வலி இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் வரை வைத்து அவை உலர்ந்ததும் நன்றாக காயவிடவும். பிறகு மசாஜ் செய்தபடி கழுவி எடுக்கவும். அதன் பிறகு வேப்ப எண்ணெயால் மசாஜ் செய்துவிடவும். தினமும் 1 முறை இதை செய்து விடலாம்.

இது கழுத்து பகுதியில் உண்டாகும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் போன பாரம்பரிய பொருள். இது வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

விளக்கெண்ணெய்

samayam tamil Tamil News Spot

விளக்கெண்ணெய் சூடாக்கி இறக்கி ஆறவைத்து இளஞ்சூடாக இருக்கும் போது கழுத்து மற்றூம் தோள்களில் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு வெந்நீரில் துணியை நனைத்து வலி இருக்கும் இடங்களில் ஒத்தடம் கொடுக்கவும். பிறகு எண்ணெயை கழுவி எடுக்கவும். தினமும் இரண்டு முறை இதை செய்யலாம். விளக்கெண்ணெயில் இருக்கும் ரிகினோலிக் அமிலம் கழுத்து வலி அழற்சியை போக்க உதவுகிறது.

மூன்று நாட்களில் மலச்சிக்கலை சரிசெய்யும் வல்லாரை மாத்திரை, எப்படி, எப்போது, யாரெல்லாம் எடுக்கலாம்!

மேற்கண்ட வைத்தியங்கள் எல்லாமே உங்கள் கழுத்துவலியை குறைக்க செய்யும். மருத்துவ சிகிச்சையோடு இதையும் நீங்கள் தொடர்ந்து எடுக்கலாம். இது பக்கவிளைவும் இல்லாதவை.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *