Share on Social Media


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து மணந்தார். நட்சத்திர ஜோடிகளாக வலம்வந்த இருவரும் விவாகரத்து செய்ய போவதாக சமீப காலமாகவே ஊடகங்களில் செய்திகள் பரவின. இந்நிலையில் அண்மையில் இருவரும் இன்று தங்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலிக்க துவங்கினார்கள். அதன்பின்னர் இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கியதும் இரு வீட்டார் சம்மதத்துடன் கோவாவில் மிக பிரமாண்டமாக, இவர்களுடைய திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்தது.

இந்நிலையில் நாக சைதன்யாவுடன் விவாகரத்து விஷயம் கசிய துவங்கியத்தில் இருந்து சில மாதங்களாகவே சமந்தா எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்தார். நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட பிரச்சினையால் முழு ஓய்வில் இருந்தார். அதனை தொடர்ந்து சமீபத்தில் நாக சைதன்யா – சமந்தா இருவரும் பிரிவதாகக் கூட்டாக அறிவித்தனர்.

இரக்கமே இல்லாம என்னை உருவக்கேலி பண்ணாங்க: சிம்பு வருத்தம்!
இந்நிலையில் சமந்தாவின் விவாகரத்து அறிவிப்புக்கு பிறகு ’என் வாழ்க்கைக்கு ஒரு காதல் கடிதம்’ என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாகசைதன்யா பதிவு செய்துள்ளார். கிரீன் லைட் என்ற புத்தகத்தை பதிவு செய்துள்ள அவர், ‘உங்கள் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மேத்யூ’ என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *