Share on Social Media


ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிக்கும் இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பிற்கு  உள்ளாகியிருக்கும் “பிரம்மாஸ்த்ரா பாகம் – 1” திரைப்படம் 09.09.2022 அன்று இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட என 5 மொழிகளில் வெளியாகிறது.  இந்தியாவின்  பிரம்மாண்ட படைப்பான  “பிரம்மாஸ்த்ரா” படத்தினை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த,  ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்திருக்கிறது. அமிதாப் பச்சன், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா அக்கினேனி ஆகியோருடன் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியாக நடித்துள்ள “பிரம்மாஸ்த்ரா”, பண்டைய இந்தியா மற்றும் நவீன உலகின் பிரதிப்லிப்பை  ஒருங்கினைத்த திரை காவியமாக தரவுள்ளது, 2022 ஆம் ஆண்டில் இந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது.

ALSO READ | “அன்பறிவு” படத்தின் ரிலீஸ் தேதி இதுதான்: Exclusive Update!

டில்லியில் ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் இயக்குனர் அயன் முகர்ஜி ஆகியோர் இணைந்து, மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். மேலும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி 09.09.2022 எனவும் அறிவித்தனர். மோஷன் போஸ்டர் ரன்பீர் கபூரின் கதாப்பாத்திரமான சிவன் பாத்திரத்தை, பிரமிக்க தக்கவகையில், நெருப்புக்கு மத்தியில் போற்றும் வகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது குறித்து  இயக்குனர் அயன் முகர்ஜி கூறுகையில்“கடந்த 10 வருடங்களாக என்னுள் வாழ்ந்த கதை இது. குடும்பத்தினரோடு இணைந்து கொண்டாட ஒரு மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் இருக்கும், இந்தியாவில் இதற்கு முன்பு பார்த்தது போல் இல்லாத சினிமா அனுபவத்தையும், சாகசங்கள் நிறைந்த பயணமாகவும், உணர்வுப்பூர்வமான இதயம் நிறைக்கும் படைப்பாகவும், இப்படத்தை பார்வையாளர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

 

பேண்டஸி சாகசம், நல்லது மற்றும் தீமை, காதல் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் காவியக் கதை, இவை அனைத்தும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்தியாவில் இதுவரை திரையில் பார்த்திராத வகையில்  இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 

ALSO READ | மாஸாக வெளிவந்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் முதல் சிங்கிள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *