1602035463 pic Tamil News Spot
Share on Social Media

தமிழ், இந்தி, பெங்காளி, கன்னட மொழி படங்களில் பாடி வருபவர் மோனாலி தாகூர். அவரின் தந்தையும், பிரபல பாடகரும்-நடிகருமான சக்தி தாகூர் ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. சக்தி தாகூர் இறந்தபோது மோனாலி சுவிட்சர்லாந்தில் இருந்தார்.

தன் தந்தை பற்றி மோனாலி இன்ஸ்டாகிராமில் நேற்று உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் மோனாலி கூறியிருப்பதாவது,

என் தந்தை…எனக்கு எல்லாமே…என் மிகப் பெரிய விமர்சகர், ஆசிரியர்…அமர் பாபா.. நேற்று இறந்துவிட்டார். அவரை விட அன்பான ஒருவரை நான் என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. அவரின் தன்னடக்கத்தை பார்த்து வியந்திருக்கிறேன். சிறந்த அறிவாளி.

உங்களால் தான் நான் கனவு காணத் துவங்கினேன் பாபா..உங்களின் திறமையால் நீங்கள் மேஜிக் செய்ததை பார்த்து கனவு கண்டேன். உங்களை பார்த்து தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. நான் மனமுடைந்து போய்விட்டேன். ஆனால் பெருமையான மகள் பாபா. நான் என் வாழ்க்கையில் செய்யும் அனைத்தின் மூலமும் உங்களை பெருமையடையச் செய்வேன். உங்கள் வழியில் தொடர்ந்து நடப்பேன். அன்பை மட்டுமே பரப்புவேன்.

நீங்கள் எனக்கு அளித்த அளவு கடந்த அன்புக்கு என்றுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த உலகில் உங்களை போன்று வேறு யாராலும் என் மீது இந்த அளவுக்கு அன்பு காட்ட முடியாது. இறக்கும் போது கூட நீங்கள் எங்களுக்கு எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை. ஒரு ராஜா மாதிரி சென்றிருக்கிறீர்கள்.

ஐ லவ் யூ பாபா…நீங்கள் என் அருகில் இருப்பதை உணர்கிறேன். கெட்டவைகளில் இருந்து என்னை காக்கும் தேவதை நீங்கள். உங்களுக்காக சோட்டு தைரியமாக இருப்பார். இயற்கை அன்னை என் பிரார்த்தனைகளை ஏற்று உங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். நீங்கள் அமைதியான முறையில் சென்றுவிட்டீர்கள்.

உங்களை போன்ற அரிய நபர்களை கடவுள் எப்பொழுதும் பத்திரமாக பார்த்துக் கொள்வார். சரியான நேரம் வரும்போது நாங்களும் வந்து உங்களை பார்ப்போம். மீண்டும் சந்திப்போம் என்று தெரிவித்துள்ளார்.

மோனாலி தாகூரின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

கெட்டோ டயட்டால் கிட்னி ஃபெயிலாகி இறந்துட்டேனா?: நடிகை விளக்கம்

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *