ஹைலைட்ஸ்:
- அவதூறான செய்திகளை பரப்பி இழிவாக பேசுவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது.
- இவர்களைப்போன்ற ஆட்களால்தான் சினிமா உலகம் படிப்படியாக அழிந்துகொண்டுவருகிறது
இந்நிலையில் மலையாள திரைப்பட நடிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோகன்லால் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் மரைக்காயர் படம் பற்றி மோகன்லாலிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அவர், மரைக்காயர் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இருந்தாலும் சிலர் அப்படத்தைப்பற்றி அவதூறான செய்திகளை பரப்பி இழிவாக பேசுவது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஒரு படம் வெளியானபின் விமர்சனங்கள் வைப்பது என்பது நியாயமான ஒன்று.
ஆனால் படம் வெளியாவதற்கு முன்பே படத்தைப்பற்றி தவறான செய்திகளை பரப்பி இழிவாக பேசுவது மிகப்பெரிய தவறு. இதை யார் செய்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. இவர்களைப்போன்ற ஆட்களால்தான் சினிமா உலகம் படிப்படியாக அழிந்துகொண்டுவருகிறது என்று மிகவும் வருத்தப்பட்டு பேசினார்.