Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • சாலையில் கவிழ்ந்த சரக்கு லாரி
  • குழந்தைகள் உட்பட 54 பேர் பலி!

மெக்சிகோவில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற டிரக் விபத்துக்கு உள்ளான கோர விபத்தில், 54 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமெரிக்காவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிக் கொண்டு வந்த டிரக், மெக்சிகோ நாட்டின் சியாபாஸ் மாகாணத்தின் புறநகர் பகுதியில் நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஆபத்தான வளைவில் டிரக் திரும்பிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 54 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆய்வக பெண் ஊழியரை… கோவிட் தாக்கிய எலி கடித்தது.. தைவானில் பரபரப்பு
காயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. அளவுக்கு அதிகமாக ஆட்களை டிரக்கில் ஏற்றி வந்ததே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *