Share on Social Media


சூப்பர் மாடல் என கூறி கொண்டு, தமிழ் சினிமா நடிகர், நடிகைகள், இயக்குனர்கள் குறித்து அவதூறாக பேசி சர்ச்சைகளை கிளப்புபவர் மீரா மிதுன். இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர்கள் மிக இழிவாக பேசிய காணொளி ஒன்று இணையத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தற்போது போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார் மீரா மிதுன்.

மாடலான மீரா மிதுன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சிக்கு முன்பாகவே அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களிடம் பணம் வாங்கி மீரா மீதுன் ஏமாற்றியதாக தொழிலதிபரான ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக மீரா மீது காவல் நிலையத்தில் பல புகார்களும் உள்ளன.

சமீப காலமாக நயன்தாரா, பிரியா ஆனந்த் மற்றும் பாடகி தீயும் உள்ளிட்டோர் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறி, நடிகைகளை வம்புக்கு இழுத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்று வெளியிட்டு பட்டியலின சமூகத்தினர் குறித்து மிக இழிவாக அந்த வீடியோவில் பேசியிருந்தார் மீரா மிதுன். பட்டியலின சமூகத்தை சார்ந்த இயக்குனர்கள், திரை பிரபலங்கள் தான் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாகவும், இவர்களை எல்லாம் சினிமாவை விட்டு துரத்த வேண்டும் என்றும் அவதூறாக பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

‘அண்ணாத்த’ படத்தில் இணைந்த விஜய் பட வில்லன்: கடுப்பான ரஜினி ரசிகர்கள்!
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த விவகாரம் தொடர்பாக மீரா மிதுனை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தனர் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார். அதனை தொடர்ந்து இதுதொடர்பாக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன், தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா? என்னை கைது செய்வது என்பது நடக்காது. அப்படி நடந்தால் அது உங்கள் கனவில் தான் நடக்கும் என்று திமிராக பேசியிருந்தார்.

மேலும் இந்த விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் சிலர் ஊதி பெரிதக்குவதாகவும், அவர்கள் எல்லாரும் தன்மீது ஆசைப்படுபவர்கள் என்றும், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் கேரளாவில் வைத்து மீரா மிதுனை கைது செய்துள்ளனர். விரைவில் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார். பட்டியலின சமூகத்தினர் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் மீரா மிதுன் மீது, வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *