Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • படக்குழுவினரை சிறைபிடித்த ஹோட்டல் நிர்வாகம்
  • உதவி கேட்ட நடிகர்கள்

ரோஹித் என்பவர் இயக்கத்தில் ரதி அக்னிஹோத்ரியின் மகன் தனுஜ் விர்வானி, மீரா சோப்ரா உள்ளிட்டோர் நடித்து வந்த படம் குட்டு கி கேர்ள்ஃபிரெண்ட். அந்த படத்தின் ஷூட்டிங் பனாரஸில் நடந்து வந்தது.

தயாரிப்பாளர் பணம் கொடுக்காததை அடுத்து படக்குழுவை பிடித்து வைத்ததுக் கொண்டது ஹோட்டல் நிர்வாகம். தனுஜும், மீராவும் மற்றொரு ஹோட்டலில் தங்கியிருந்ததால் தப்பித்தார்கள்.

ஹோட்டிலில் இருந்து ஒரு வழியாக வெளியே வந்த மூத்த நடிகர் சுகேஷ் ஆனந்த் கூறியதாவது,

இந்த படத்தில் நடித்து முடிப்பேன் என்று எனக்கு தோன்றவில்லை. என்ன ஒரு பயங்கரமான அனுபவம். ஹோட்டல் நிர்வாகத்தினர் எங்களை வெளியே விடவில்லை. இதையடுத்து நான் நடிகை நுபுர் அலங்காரை தொடர்பு கொண்டேன். அவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை டேக் செய்து ட்வீட் செய்தார்.

நுபுரிடம் கூறுவதற்கு முன்பு போலீசில் புகார் அளிக்கவில்லை. நுபுர் விரைந்து செயல்பட்டார். தயாரிப்பாளரிடம் பணம் இல்லை என்றால் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களை பிடித்து வைப்பதா? என்றார்.

படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

கடந்த மூன்று நாட்களாக நடப்பது எல்லாம் குழப்பமாக இருக்கிறது. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார்கள். மீண்டும் எப்பொழுது படப்பிடிப்பு துவங்கும் என்று கேட்டால் ஏதாவது சாக்கு சொல்கிறார்கள் என்றார்.
ஸ்ரீதேவி மகளை அடுத்து விஜய் பட ஹீரோயினை காதலிக்கும் தம்பி நடிகர்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *