Share on Social Media


`Me Too’ என்கிற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உலகம் முழுவதுமிருக்கும் பெண்கள் பலரும், தாங்கள் சந்தித்த பாலியல் தொல்லைகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுவந்தனர். இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான பெங் ஷுவாய், சீனாவின் முன்னாள் துணை அதிபர்மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

`மீ டு’ குற்றச்சாட்டு!

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தனது வெய்போ (சீனாவிலுள்ள சமூக வலைதளம்) சமூக வலைதளப் பக்கத்தில், “2012 முதல் 2018 வரை என்னைப் பலவந்தப்படுத்தி, பாலியல் தொல்லைகளைக் கொடுத்து வந்தார் ஜாங் கயோலி (Zhang Gaoli) . ஆரம்பத்தில் நான் முடியாது என்றேன். ஆனால், என்னை அடிபணியவைத்து சித்ரவதை செய்துவந்தார். அவராக என்னிடம் பேசுவதை நிறுத்தும்வரை இந்தச் சித்ரவதைகளை நான் அனுபவித்தேன். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் ஆதாரமில்லை. ஆனால், கயோலியின் மனைவிக்கு இது தெரியும்’’ என்று பதிவிட்டிருந்தார் பெங் ஷூவாய்.

இந்தப் பதிவு வெளியான சில மணிநேரங்களிலேயே இணையதளத்திலிருந்து அகற்றப்பட்டது. இருந்தும், அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவிவந்தன. இதையடுத்து இந்த விவகாரம் பெரிய அளவில் பேசுபொருளானது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *