Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • மணிரத்னம் பெயரில் ட்விட்டரில் போலி கணக்கு
  • போலி ஆசாமியை வெளிச்சம் போட்டு காட்டிய சுஹாசினி
  • மணிரத்னம் ட்விட்டரிலேயே இல்லை

திரையுலக பிரபலங்களின் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகள் இருக்கிறது. அதிலும் குறிப்பாக நகைச்சுவை நடிகர்களான கவுண்டமணி, யோகி பாபு உள்ளிட்டோரின் பெயர்களில் போலி கணக்குகள் உள்ளன. அந்த போலி கணக்குகளை நிஜம் என்று பலரும் பின்தொடர்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக கவுண்டமணியின் போலி கணக்கில் இருந்து ரஜினி உள்ளிட்ட திரையுலகினரையே கிண்டல் செய்து ட்வீட் போடுகிறார்கள். இந்நிலையில் காதலை கொண்டாடுவதற்கு பெயர் போன இயக்குநர் மணிரத்னத்தையும் போலி கணக்கு ஆசாமிகள் விட்டு வைக்கவில்லை.

மணிரத்னம் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் தன் பிறந்தநாள் அன்று ட்விட்டரில் சேர்வதாக கூறி மணிரத்னம் பெயரில் ஒரு கணக்கு துவங்கப்பட்டது. அதை பார்த்த சினிமா ரசிகர்களோ, அது நிஜமாகவே மணிரத்னம் தான் என்று நினைத்து அந்த கணக்கை பின் தொடரத் துவங்கினார்கள்.

இதை பார்த்த மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுஹாசினி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
@ Dir_ ManiRatnam என்கிற பெயரில் யாரோ ஒருவர் இயக்குநர் மணிரத்னம் இன்று ட்விட்டரில் சேர்ந்துள்ளார் என்று ட்வீட் செய்திருக்கிறார். அது போலி கணக்கு. அந்த நபர் போலி. தயவு செய்து கவனமாக இருக்கவும், மற்றவர்களுக்கும் தெரிவிக்கவும். நன்றி என்று கூறியுள்ளார்.

சுஹாசினியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

நல்ல வேளை சொன்னீர்கள் மேடம். அந்த போலி ஆசாமியை நிஜம் என்று நம்பி பின்தொடரத் துவங்கிவிட்டோம். மணி சாருக்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

மணி சாரின் ரசிகர்கள் என்கிற பெயரில் இருக்கும் ட்விட்டர் கணக்கை நம்பலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கெரியரை பொறுத்த வரை தன் கனவு படமான பொன்னியின் செல்வனை இயக்கி வந்தார் மணிரத்னம். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
நடிகர் கிங்காங் மகனா இது, வாவ்: வைரல் போட்டோ



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *