Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • பெரிய அளவில் ஹிட்டான மாநாடு
  • சம்பளத்தை உயர்த்தும் சிம்பு

சிம்புவின் கெரியர் காலி என்று சொல்லப்பட்ட நிலையில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.

படத்தை பார்த்த அனைவரும் சிம்பு இஸ் பேக் என்கிறார்கள். சிம்புவுக்கு நிகரமாக வில்லன் எஸ்.ஜே. சூர்யாவும் பெயர் எடுத்துவிட்டார்.

மாநாடு பட வெற்றியை பார்த்த சிம்பு தன் சம்பளத்தை உயர்த்த முடிவு செய்திருக்கிறாராம். இனி தான் நடிக்கும் படங்களில் கூடுதல் சம்பளம் வாங்கப் போகிறாராம்.

அவர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மாநாடு படத்தால் ஒரு தயாரிப்பாளராக தனக்கு லாபம் இல்லை என சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
மாநாடு படத்தால் எனக்கு லாபம் இல்லை, காரணம் சிம்புவின்…: தயாரிப்பாளர்பேட்டி ஒன்றில் சுரேஷ் காமாட்சி கூறியதாவது,

மாநாடு படத்தை வாங்கிய அனைவரும் லாபம் அடைந்திருக்கிறார்கள். தியேட்டரிக்கல், சாட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸை வாங்கிய அனைவருக்கும் லாபம். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எனக்கு லாபம் இல்லை.

அதற்கு காரணம் சிம்புவின் முந்தைய பட வசூல் ஆரும். ரிலீஸுக்கு பிறகு வெற்றி என்பது வேறு. ஆனால் ரிலீஸுக்கு முன்பு சில விஷயங்கள் இருக்கிறது. அது எனக்கு கிடைக்கவில்லை என்றார்.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *