Share on Social Media


“விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள்” – மோடி

பிரதமர் மோடி, “விவசாயிகளின் நலனுக்காகவே மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வேளாண் விளைபொருட்களை சுலபமாக விற்பனை செய்வதற்கு பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 3 வேளாண் சட்டங்களுக்கும் ஆதரவளித்த விவசாய சங்கங்களுக்கு இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் மோடி

3 வேளாண் சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மிக விரிவான விவாதம் நடத்தப்பட்டு உள்ளது. மூன்று வேளாண் சட்டங்களின் நலன்களை விவசாயிகளின் ஒரு பகுதியினருக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்து இருக்கிறோம். ஒரு வருடத்துக்கு மேலாக போராடி வரும் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

`விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கம்’

FEhsgHqVgAI2pMi Tamil News Spot
மோடி

பிரதமர் மோடி, “2014-ம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு இருக்கிறோம். விவசாயிகளின் வேதனைகளை நேரடியாக அறிவேன். அவர்களுக்காக பல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விதிகளை மாற்றி சிறப்பான முறையில் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்க தொடர் முயற்சிகள் செய்யப்படுகிறது. சரியான விதைகள் உரம் பயிர் காப்பீடு என சிறு விவசாயிகளுக்கான திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன, வேளாண் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 80 சதவீத மக்கள் விவசாயம் சார்ந்த தொழிலை செய்கிறார்கள். மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி பல மடங்கு உயர்ந்துள்ளது” என்றார்.

பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

பிரதமர் மோடி இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. அடுத்தாண்டு உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இன்றைய உரை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *