Share on Social Media


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, பல திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகுகின்றன.  அவற்றின் பட்டியல் இதோ,

தீர்ப்புகள் விற்கப்படும் (Theerpugal virkapadum) :

தேரன் இயக்கத்தில் சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் திரைப்படம் “தீர்ப்புகள் விற்கப்படும் (Theerpugal virkapadum)”.  இப்படத்தில் ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், லிசி ஆண்டனி, ஜார்ஜ் மரியன், சார்லே ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தை ஹனிபீ கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.  மேலும் இப்படத்திற்கு பிரசாத் எஸ்.என் இசையமைத்துள்ளார்.  இந்த திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

குருதி ஆட்டம்(Kuruthiaattam) :

ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் தமிழ் மொழியில் உருவான ஆக்ஷன் படம் “குருதி ஆட்டம்(Kuruthiaattam)”.  இப்படத்தில் அதர்வா, பிரியா பவானி ஷங்கர், ராதா ரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.  கடந்த ஆண்டு கோவிட் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டதை அடுத்து தற்போது இந்த திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

ALSO READ | 2021-ல் அதிகம் தேடப்பட்ட நிகழ்ச்சிகளில் முதலிடம் பிடித்த Squid Game!

ரைட்டர் (Writer) :

பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ள படம் “ரைட்டர் (Writer)”.  இப்படத்தை ரஞ்சித் தயாரிக்க, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.  இப்படம்  டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

மாட்ரிக்ஸ் (Matrix) :

லானா வச்சோவ்ஸ்கி இயக்கத்தில் ஆங்கில மொழியில் உருவாகியுள்ள அறிவியல் தொழில்நுட்ப படம் தான் “மாட்ரிஸ் ரெஸ்சுரரெக்ஷன்ஸ்(Matrix Resurrections)”.  இப்படத்தில் கினு ரீவ்ஸ், கேரி-ஆன் மோஸ், ஜெசிகா ஹென்விக், ஜொனாதன் கிராஃப், நீல் பேட்ரிக் ஹாரிஸ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த  திரைப்படம் டிசம்பர்-22ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

 83-TheFilm :

கபீர் கான் இயக்கத்தில் ஹிந்தி மொழியில் உருவான கிரிக்கெட் பற்றிய திரைப்படம் 83-TheFilm.  தில் ரன்வீர் சிங், கிரிக்கெட் வீரர் கபில்தேவ் , தீபிகா படுகோனே , பங்கஜ் திரிபாதி , தாஹிர் ராஜ் பாசின் , ஜீவா , சாகிப் சலீம் , ஜதின் சர்னா ,சிராக் பாட்டீல் , டிங்கர் ஷர்மா, நிஷாந்த் தஹியா, ஹார்டி சந்து , சாஹில் கட்டார் , அம்மி விர்க் , ஆதிநாத் கோத்தாரே , தைர்யா கர்வா மற்றும் ஆர் பத்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்த  திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

83

ஷியாம் சிங்க ராய்(ShyamSinghaRoy) :

ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு படம் “ஷியாம் சிங்க ராய்(ShyamSinghaRoy)”.  இப்படத்தில் நானி, சாய் பல்லவி , கிருத்தி ஷெட்டி மற்றும் மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்துள்ளனர்.   இந்த திரைப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

ஆனந்தம் விளையாடும் வீடு (Anandham Vilaiyadum Veedu) :

நந்தா பெரியசாமி இயக்கத்தில் கவுதம் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளியாக போகும் திரைப்படம் “ஆனந்தம் விளையாடும் வீடு (Anandham Vilaiyadum Veedu)”.  இப்படத்தில் ஷிவாத்மிகா, சேரன், சரவணன், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் நடித்துள்ளனர்.  இதனை பி.ரங்கநாதன் தயாரித்துள்ளார்.  இப்படம் டிசம்பர்-24ம் தேதியன்று திரையரங்குகளில் ரிலீசாகுகிறது.

AnandhamVilaiyadumVeedu

ALSO READ | ‘பீஸ்ட்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட நடிகை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *