Share on Social Media

இந்நிலையில், இந்த ஐ.பி.ஒ வெளியீட்டை அனுமதிக்கலாமா என்பது குறித்து பொருளாதார விவகாரத் துறைக்கான மத்திய அமைச்சரவைக் குழு (CCEA) கடந்த 12-ம் தேதி அன்று கூடி விவாதித்தது. இந்த விவாதத்தின் முடிவாக, எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஒ வெளியிட அமைச்சரவைக் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி உள்பட பலரும் இந்த அமைச்சரவைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், எல்.ஐ.சி. பெரும் மதிப்பு கொண்ட அரசு நிறுவனம் என்பதால், அந்நிறுவனத்தின் மதிப்பை எப்படி நிர்ணயம் செய்வது என்பதில் பல குழப்பங்கள் இருந்துவந்தன.

தற்போது இந்த நிறுவனத்தின் கடைசிக் காலாண்டில் நடந்த வர்த்தகத்தின் மதிப்பை அடிப்படையாக வைத்து, இந்த நிறுவனத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் இறுதியான முடிவுக்கு எடுக்கப்பட உள்ளது. எனவே, அடுத்த சில மாதங்களில் எல்.ஐ.சி நிறுவனத்தின் ஐ.பி.ஒ பங்குச் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Thanks for the Source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *