Share on Social Media


சினிமாவில் கொடிகட்டி பறக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில் என் கொடியும் பறக்கும் என்று நிரூபித்தவர் தான் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா.  Female Generic படங்கள் தமிழில் வெற்றி பெறும் என்று நிரூபித்து முன்னோடியாக திகழ்ந்தவர்.

தமிழ் மொழி மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்ற பெயரைப் பெற்ற ஒரே தமிழ் நடிகை ஆவார்.  இவர் பெங்களூருவில் மலையாள கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை விமானப்படை அதிகாரியாக இருந்ததால், பல இடங்களில் நேரத்தை செலவிட நேர்ந்தது.  அதனால் நயன்தாரா சென்னை, குஜராத், டெல்லி, ஜம்னா நகர் போன்ற இடங்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.  கல்லூரி பயிலும் போது மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு மாடலிங் செய்து வந்தார்.

சத்யன் அந்திகாட் இயக்கத்தில் 2003-ல் வெளிவந்த ‘மனசினக்கரே’ என்ற படத்தின் மூலம் நயன்தாரா மலையாள திரையுலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2005-ல் தமிழில் வெளியான ‘ஐயா’ படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  பின்னர் தெலுங்கில் ‘லக்ஷ்மி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.  2010-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர்’ என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் கால் பதித்தார் நயன்.  இதனையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கிடைத்ததையடுத்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.  சிறிது கால இடைவெளிக்குப் பின்னர் இவருக்கு சிறந்ததொரு திருப்புமுனையாக அமைந்த படம் ‘ஸ்ரீராமராஜ்யம்’.  இந்த படத்தில் சீதையாக நடித்ததற்காக இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருதும், நந்தி விருதும் கிடைத்தது.

காதல் பற்றிய கிசுகிசுக்களில் இவரது பெயர் அதிக அளவில் அடிபட்டது.  அதில் முதன்முதலாக இயக்குனரும், நடிகருமான சிலம்பரசனுடன் இவரது பெயர் இணைத்துப் பேசப்பட்டது. ஆனால் 2006-ல் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக்கப் ஆனது.  பின்னர் நடன மாஸ்டர் பிரபுதேவாவுடன் இணைத்து சில செய்திகள் வெளியானது, நாளடைவில் அந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டது.  தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் நீண்ட காலங்களாக உறவில் இருந்து வருகிறார். ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.  மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாகவும் இருவரும் உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

nayan

இவரை இந்த அளவிற்கு தரம் உயர்த்தி  லேடி சூப்பர் ஸ்டாராக இன்றளவும் நிலைக்க வைத்துள்ள 6 படங்கள் 

1)புதிய நியமம் :

ஏகே சாஜன் இயக்கிய இந்தப் படத்தில் நயன்தாரா வாசுகி என்ற கதாபாத்திரத்தில் திறம்பட நடித்திருப்பார்.   இது ஒரு திரில்லர் படமாகும்.   இந்த படம் அவரது கேரியரை நன்கு உயர்த்தியது. இந்தப்படம் அவருக்கு பிலிம்பேர் விருதையும் பெற்றுத்தந்தது.

2)சந்திரமுகி :

பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.  இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.  திகில் நிறைந்த இந்தப்படத்தில் தனது அப்பாவியான கதாபாத்திரத்தின் மூலம் நன்கு ஸ்கோர் செய்திருந்தார்.  முதன்முதலாக ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ்படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது.

3)சிம்ஹா :

இந்த படம் ஒரு சூப்பர்ஹிட் படமாக 2010-ல் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக இருந்தது.  நயன்தாரா மற்றும் நந்தமுரி பாலகிருஷ்ணா ஆகியோருக்கு இடையேயான கெமிஸ்ட்ரி மக்களால் அதிகம் பேசப்பட்டது.  இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.

4)ஸ்ரீராமராஜ்யம் :

பாபு இயக்கத்தில் உருவான வரலாற்றுப் படம் தான் ‘ஸ்ரீராமராஜ்யம்’.  இதில் நயன்தாரா சீதையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.  இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு சிறந்த தெலுங்கு நடிகைக்கான விருதும், நந்தி விருதும் வழங்கப்பட்டது.

5)சைரா நரசிம்ம ரெட்டி :

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி விஜய் சேதுபதி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் கொண்டு உருவாக்கப்பட்ட வரலாற்று படம் தான் இது. இந்தப்படத்தில் நயன்தாரா தனது நடிப்பு திறமையை காண்பித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார்.

6)இமைக்கா நொடிகள் :

இது ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் படம் இதில் நயன்தாரா சிபிஐ அதிகாரியாக நடித்திருப்பார்.  எந்த கதாபாத்திரத்தையும் தன்னால் திறம்பட நடித்துக் காட்ட முடியும் என்பதை இப்படத்தின் மூலம் நிரூபித்தவர்.  இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

தற்போது நயன்தாரா பாலிவுட் பாட்சா ஷாருக்கான் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.  மேலும், இன்று அவரது புத்திய படம் பற்றிய அறிவிப்பும் வெளிவர உள்ளது.

ALSO READ பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் பிரபுதேவா – விஜய்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *