Share on Social Media


மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய படங்களுக்கென்று எப்போதுமே ஒரு கலர் உண்டு. ஒரு வித்தியாசமான ஸ்டைல் உண்டு. இயற்கை தொடங்கி புறம்போக்கு படம் வரை இதைதான் செய்திருந்தார் ஜனநாதன். லாபம் படத்திலும் அதைதான் செய்திருக்கிறார். அவரின் கம்யூனிச சித்தாந்தத்தை கலை வழியே மக்களிடம் கொண்டு செல்லும் அடுத்த முயற்சிதான் லாபம்.

ஆனால் இயற்கை, பேராண்மை படங்களில் இருந்த ஒரு கதை நயம் லாபம் (Laabam) திரைப்படத்தில் தவறியிருக்கிறது. படம் முழுக்க பிரசார நெடிதான். அளவுக்கு அதிகமான கருத்தினை ஒரே படத்தில் கடத்த முயன்றிருக்கிறார் இயக்குநர். அதன் வெளிப்பாடாக படம் முழுக்க விஜய் சேதுபதி (Vijay Sethupathi) பேசுகிறார், பேசுகிறார், பேசிக் கொண்டே இருக்கிறார். இந்தப் படத்துக்கு பின் அவரை சின்ன சமுத்திரக்கனி என்றே அழைக்கலாம்.

ALSO READ | துக்ளக் தர்பாரில் யார் வில்லன்? – விமர்சனம்

உழைப்பாளிக்கு உழைப்பு சக்தியின் காரணமாக கூலி கிடைக்கிறது. முதலாளிக்கு எதன் அடிப்படையில் லாபம் கிடைக்கிறது என்ற கேள்வியை சுற்றி நகர்கிறது திரைப்படம். லாபம் என்பது ஒரு “Day light Robbery” என்கிறார் இயக்குநர். அதற்கான காரணிகளையும் அது குறித்து அறிஞர்கள் சொன்னவற்றையும் படத்தில் மேற்கோள் இட்டு காட்டியிருக்கிறார். லாபம்தான் பொருளாதார சமமின்மைக்கு முக்கிய காரணம் என லாபம் திரைப்படம் பேசுகிறது. 

படத்தின் கருப்பொருள் பேசும் ஆழம் படமாக்கலில் தெரியவில்லை. லோகேஷன்களிலும் மேகிங்கிலும் இது ஒரு குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்பது அப்பட்டமாக தெரிகிறது. ஆங்காங்கே பிட் பிட்டாய் வரும் காட்சிகள், எது ஃப்ளாஷ்பேக், எது நிகழ்வு என்பதை கூட வெளிப்படுத்தாத எடிட்டிங் என நிறைய குறைகள். இருந்தாலும் விஜய் சேதுபதி, படத்தின் கருப்பொருள் ஆகியவை படத்தை முழுவதுமாக பார்த்து முடிக்க வைத்தது.

ஜகபதி பாபு தலைமையிலான வில்லன் அணியில் சாய் தன்ஷிகா, சண்முகராஜன், ஓ.ஏ.கே.சுந்தர் என குரு குழு., விஜய் சேதுபதி தலைமையிலான ஹீரோ அணியில் நிதிஷ் வீரா, ஷ்ருதிஹாசன், கலையரசன், ரமேஷ் திலக் என ஒரு குழு என ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இதையெல்லாம் தாண்டி ஒரு சீரியஸான போலீஸ் கதாபாத்திரத்தை உருவாக்க முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கிறார்கள்.

சமூகத்தில் பேசப்பட வேண்டிய விஷயங்களை சினிமா வழியாக பேசும்போது அத வெகுஜனத்தை போய் சேர்கிறது. ஆனால் அதே சினிமா ரசிக்கும்படியாகவும் இருந்தால் மட்டுமே அது பல கோடி மக்களை சென்றடையும். பா.ரஞ்சித்தும் வெற்றிமாறனும் அதைதான் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் லாபம் அதனை செய்ய தவறியிருக்கிறது.

(Authored By: Anandakumar M)

ALSO READ | மகளுடன் நடிக்கமாட்டேன்! விஜய் சேதுபதி அதிரடி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR

Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *