Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • தளபதி 66 பட ஹீரோயின் யார்?
  • க்ரித்தி ஷெட்டியை ஹீரோயினாக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை

வம்சி பைடிபல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் தளபதி 66 படம் குறித்து தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என்று கூறப்பட்டது.

நானும், தளபதி விஜய்யுமா?, சுத்த பொய்: கீர்த்தி சுரேஷ்

அவரிடம் கேட்டதற்கு, நான் தளபதி 66 படத்தில் நடிக்கவில்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து விஜய்க்கு ஹீரோயின் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் உப்பேனா படம் மூலம் பிரபலமான க்ரித்தி ஷெட்டியை விஜய்க்கு ஜோடியாக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். 18 வயதே ஆன க்ரித்தி ஷெட்டி தெலுங்கு திரையுலகில் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார்.

அதடுத்தடுத்து புதுப்பட வாய்ப்பு அவரை தேடி வருகிறது. இந்நிலையில் அவர் தன் சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்திவிட்டதாக கூறப்படுகிறது.

உப்பேனா படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்த க்ரித்தியை, மக்கள் செல்வனுக்கு ஜோடியாக்க முயற்சி நடந்தது. ஆனால் மகளாக நடித்தவருடன் ரொமான்ஸ் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டார் விஜய் சேதுபதி.

இந்நிலையில் தான் க்ரித்தி ஷெட்டியை விஜய்க்கு ஜோடியாக்குமாறு கோரிக்கை எழுந்திருக்கிறது.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.