Share on Social Media


கொங்கு நாடு கிளப்பிவிட்டு இணையமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் எல்.முருகன். அவர் வகித்துவந்த பாஜக மாநிலத் தலைவர் பதவி காலியான நிலையில் அண்ணாமலை அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டார்.

இன்று ஜூலை 16ஆம் தேதி சென்னையில் உள்ள கமலாலயத்தில் தலைவராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் கோவையிலிருந்து நேற்று சென்னைக்கு யாத்திரை போல் சாலை மார்க்கமாக கிளம்பிவிட்டார் அண்ணாமலை. ஏற்கெனவே கொங்கு நாடு கோரிக்கையை பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் கிளப்பிக் கொண்டிருக்கும் நிலையில் கோவையிலிருந்து வழியெங்கும் தமது கட்சித் தொண்டர்களைச் சந்தித்து வருகிறார்.
சென்னைக்கு அப்புறம் கோவை இல்ல, இனி திருச்சி தான்: கே.என்.நேரு அறிவிப்பு!
இந்நிலையில் நாமக்கலுக்கு அவர் வந்த போது மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அண்ணாமலையை வரவேற்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒருபகுதியாக நாமக்கல் நகரின் பல முக்கிய சாலை சந்திப்புகளில் பாஜக கொடியும், அண்ணாமலையை வரவேற்று பேனர்களும் வைக்கப்பட்டன.

திமுக ஆட்சியை சரியாக நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை !

இந்நிலையில், நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நகர கிளை சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ”கொங்குநாட்டின் வருங்கால முதல்வரே” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
tamil samayam Tamil News Spotரேஷன் அட்டைதாரர்களுக்கு அமைச்சர் சொன்ன சூப்பர் அறிவிப்பு!
“பாஜக கொங்கு மாநிலம் குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை. ஒன்றிய அரசு என திராவிட கட்சிகள் முழங்கியதால் அவர்களுக்கு பாடம் கற்பிக்கவே கொங்கு நாடு எனும் கோஷம் எழுப்பப்படுகிறது. மாநில மக்கள் விரும்பினால் அதற்கேற்றாற்போல மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்” என பாஜக தலைவர்கள் ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்க, பாஜக தொண்டர்களோ கொங்கு நாடு கோஷத்தை தொடர்ந்து முன்வைத்து வருகின்றனர்.



Thanks for the source

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *