Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • கன்யே வெஸ்ட்டை பிரிந்த கிம் கர்தாஷியன்
  • விரைவில் விவாகரத்து கோரும் கிம்

அமெரிக்க நடிகையும், மாடலும், தொழில் அதிபருமான கிம் கர்தாஷியன் தன் காதல் கணவரான ராப்பர் கன்யே வெஸ்ட்டிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினார். இந்நிலையில் விரைவில் விவாகரத்து அளிக்குமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருக்கிறார் கிம்.

4 பிள்ளைகளை வளர்ப்பது, சொத்து விவகாரம் உள்ளிட்டவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால் அதை தனி வழக்காக விசாரிக்குமாறும், திருமணத்தை முதலில் ரத்து செய்துவிடுமாறும் கிம் கர்தாஷியன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

கிம், கன்யே வெஸ்ட் விவாகரத்து வழக்கில் மார்ச் 22ம் தேதி தான் தீர்ப்பு வழங்கப்படவிருக்கிறது. இந்நிலையில் முன்கூட்டியே முடித்துவிடுமாறு கூறியிருக்கிறார் கிம்.

இதற்கிடையே மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார் கன்யே வெஸ்ட் என்று தகவல் வெளியானது. ஆனால் கன்யேவுடன் சேர்ந்து வாழ்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறாராம் கிம்.

தான் கன்யே வெஸ்ட்டுடன் சேர்ந்து வாழ்ந்த பங்களாவை அவருக்கு பெரும் தொகையை கொடுத்து வாங்கிவிட்டார்.

கன்யே வெஸ்ட்டை பிரிந்த கிம் கர்தாஷியனின் வாழ்க்கையில் மீண்டும் காதல் வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய நடிகர் ஒருவர் என் ஆடைக்குள் கையை விட்டார்: பிரபல நடிகை திடுக் தகவல்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published.