Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை
  • குஷ்புவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

மழை மற்றும் வெள்ளத்தால் சென்னை மக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடவுளே நவம்பர், டிசம்பர் வந்தாலே சென்னையில் இருக்க பயமாக இருக்கிறதே என்கிறார்கள்.

இந்நிலையில் ட்விட்டரில் ஆக்டிவாக இருக்கும் நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவை சும்மா, சும்மா ட்வீட் செய்வதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி உதவி செய்யுங்கள் என்றார்கள் சமூக வலைதளவாசிகள்.
அதற்கு குஷ்புவோ, நான் நேரில் வரவில்லை என்று கேட்கும் லூசர்களே, தேவைப்படுவோருக்கு உதவி செய்ய நான் நேரில் வரத் தேவையில்லை. அதற்கென்று ஒரு குழு வைத்திருக்கிறேன். அதனால் பொறுமையாக அமர்ந்து போனை நோண்டவும் என்றார்.

அந்த ட்வீட்டை பார்த்த சமூக வலைதளவாசி ஒருவர் கூறியிருப்பதாவது,
மேடம் அந்த கமெண்டுகளை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே இருங்கள். ஆனால் அரண்மனை 4 படத்தை மட்டும் இயக்க வேண்டாம் என்று சுந்தர் சி.யிடம் சொல்லவும் ப்ளீஸ், போற உசுரு மழைலயே போகட்டும் என்று தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி, பள்ளிக்கரணையில் தண்ணீர் தேங்குவது ஏன்?: விஜய் பட இயக்குநர் செம விளக்கம்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *