Share on Social Media


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கவின். இவர்’லிப்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இந்த படத்தை வினீத் வரப்பிரசாத் இயக்கி உள்ளார். 

இப்படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. லிப்ட் (Lift) படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கொரோனா 2-வது அலை காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால் படத்தின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ALSO READ | கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன்! வெளியான முக்கிய வீடியோ!

இதனிடையே, இப்படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் பரவி வந்தன. இந்நிலையில் கவினின் (Kavin) லிப்ட் படத்தின் வெளியீடு குறித்து லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அவர்., இந்த படத்தின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. ஜூன் 20-ம் தேதிக்கு மேல் சூழ்நிலையைப் பார்த்துவிட்டு, தியேட்டரில் வெளியிடக் கூடிய சூழல் இல்லை என்றால் மட்டுமே ஓடிடியில் வெளியாகும் என்றார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR





Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *