Share on Social Media


பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவினின் நடிப்பில் உருவான ‘லிஃப்ட்’ படம் அணையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குனர் வினீத் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் கவினின் அடுத்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கவின் நெல்சன் திலீப்குமாரின் படங்களில் ஏற்கனவே உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் பீஸ்ட் படத்திலும் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதனிடையில் ‘லிஃப்ட்’ படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா நடித்துள்ளார்.

இந்நிலையில் கவினின் அடுத்தப்படம் குறித்து செய்திகள் வெளியாகியுள்ளது. அதன்படி நயன்தாரா – விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் கவின். ‘ஊர்க்குருவி‘ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தினை விக்னேஷ் சிவனின் உதவியாளராக ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திலும், இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் ‘டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள்’ படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் இயக்க உள்ளார்.

திரையரங்கு மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்ட ரசிகர்கள்: சுதீப் வேண்டுகோள்!
இது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறும் போது, அருண் என்னிடம் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். அவரது ஐடியாக்களும் அவரின் தெளிவான சிந்தனையும் என்னை எப்போதும் ஆச்சர்யப்படுத்திக் கொண்டே இருக்கும். Rowdy pictures சார்பில், “ஊர்குருவி” படம் மூலம் அவரை இயக்குநராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது.

இப்படத்தில் நடிக்க தமிழின் முக்கியமான பெரிய நட்சத்திரங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் இது குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும். இப்படம் முழுமையாக தமிழ்நாட்டின் தென் பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. நேர்த்தியான, தரமான கதைகளின் மீது Rowdy pictures எப்போதும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறது. ஊர்குருவி ரசிகர்களுக்கு இன்பயமான ஒரு அனுபவத்தை தரும் என தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மொழியில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்!



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *