Share on Social Media


ஹைலைட்ஸ்:

  • லோஹிதா ரெட்டியை மணந்த கார்த்திகேயா
  • கார்த்திகேயா திருமணத்தில் கலந்து கொண்ட சிரஞ்சீவி

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. அவர் கடந்த 2010ம் ஆண்டில் இருந்து லோஹிதா ரெட்டி என்பவரை காதலித்து வந்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தான் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து ஹைதராபாத்தில் கார்த்திகேயா, லோஹிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேரில் வந்து மணமக்களை ஆசிர்வாதம் செய்தார். தெலுங்கு திரையுலக பிரபலங்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு கார்த்திகேயாவை வாழ்த்தினார்கள்.

அண்மையில் நடந்த ராஜ விக்ரமார்கா விழாவில் தான் லோஹிதாவுக்கு ப்ரொபோஸ் செய்தார் கார்த்திகேயா. நான் லோஹிதாவை பல ஆண்டுகளாக காதலித்தபோதிலும் இந்த நிகழ்ச்சியில் தான் முதல்முறையாக ப்ரொபோஸ் செய்கிறேன் என்றார்.

மேடையில் ப்ரொபோஸ் செய்ததை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்று கார்த்திகேயா மேலும் தெரிவித்தார்.
சூர்யாவுக்கு சரி, ஆனால் விஜய்க்கு முடியாது: சிம்ரன்



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *