Share on Social Media


தன் வருங்கால மனைவியை தோழி, காதலி, கிரஷ், முன்னாள் காதலி என்று தெரிவித்துள்ளார் வலிமை பட வில்லனான கார்த்திகேயா.

கார்த்திகேயா

ஆர்எக்ஸ் 100 படம் மூலம் பிரபலமான தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவுக்கும், அவரின் காதலியான லோஹிதா ரெட்டிக்கும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. தன் புதுப்படமான ராஜா விக்ரமார்கா விழாவில் லோஹிதாவுக்கு ப்ரொபோஸ் செய்திருக்கிறார் கார்த்திகேயா. மேலும் திருமண தேதியையும் அறிவித்துள்ளார்.

திருமணம்

samayam tamil Tamil News Spot

கார்த்திகேயாவுக்கும், லோஹிதாவுக்கும் நவம்பர் 21ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. 2010ம் ஆண்டு என்.ஐ.டி. வாரங்காலில் அவர்கள் முதல்முறையாக சந்தித்தார்கள். அதன் பிறகு காதலில் விழுந்தார்கள். தன் காதலியே மனைவியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் கார்த்திகேயா.

மீடியா

samayam tamil Tamil News Spot

தன் காதலியை மீடியாவுக்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்து வைத்தார் கார்த்திகேயா. அவர் கூறியதாவது, இவர் தான் லோஹிதா. என் தோழி, கிரஷ், காதலி, முன்னாள் காதலி, மீண்டும் தோழி, வருங்கால மனைவி, விரைவில் என் வாழ்க்கைத் துணையாகப் போகிறார் என்றார். லோஹிதாவை அவர் முன்னாள் காதலி என்று கூறியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. பிரேக்கப் ஆகி மீண்டும் சேர்ந்திருப்பார்கள் போன்று என்கிறார்கள் ரசிகர்கள்.

வாக்குறுதி

samayam tamil Tamil News Spot

நான் நடிகனான பிறகு உன் தந்தையை சந்தித்து நான் ஹீரோவானதும் உங்கள் மகளை திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்பேன் என வாக்குறுதி அளித்தேன். என் வாக்குறுதியை இன்று நிறைவேற்றிவிட்டேன். என் வேலை மூலம் உன்னை பெருமையடையச் செய்வேன் என இன்று வாக்குறுதி அளிக்கிறேன் என லோஹிதாவிடம் தெரிவித்தார் கார்த்திகேயா.



Source link

Share on Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *